நீதிபதியின் சபாஷ்.. 34 வருடங்களுக்கு முன்பு.. சீதாவின் சேலையிலிருந்த 20 ரூபாய்.. நீதிமன்றம் அதிரடி
பாட்னா: கூலித் தொழிலாளி சீதாவுக்கு விரைவில் நியாயம் கிடைக்க போகிறது.. யாரிந்த பெண் சீதா? பீகார் நீதிமன்றத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. அத்துடன் இந்த வழக்கில் என்ன தண்டனை கிடைக்க போகிறது? என்ற ஆர்வமும் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
சற்று தாமதமானாலும் நீதிமன்றங்கள் மூலம் லஞ்சம் வாங்கியவர்கள் தண்டிக்கப்பட்டு கொண்டேயிருக்கிறார்கள். நம்முடைய திருப்பூர் கோர்ட்டில், கடந்த மாதம்கூட ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் பிஎன் ரோட்டை சேர்ந்தவர் ஹோமியோபதி டாக்டர் தண்டபாணி.. இவரது அண்ணன் மேகநாதன். இவர்கள் தங்களது பட்டா தொடர்பாக அவிநாசி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்கும்போது, மண்டல துணை தாசில்தாராக இருந்த பாலசுப்ரமணியம் (56), பட்டா வழங்குவதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டாராம்..
ரூ.8 விஏஓ பாலசுப்பிரமணியம் பெற்றுள்ளார். இந்த வழக்கு திருப்பூர் தலைமை குற்றவியல் நீதித்துறை மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், விஏஓ பாலசுப்ரமணியத்துக்கு 3 வருட சிறை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் தற்போது விதிக்கப்பட்டுள்ளது. 14 வருடம் கழித்தும் குற்றவாளி தண்டிக்கப்பட்டுள்ளது, பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.
பீகார்: அதுபோலவே, பீகாரிலும் ஒரு தீர்ப்பு தற்போது தரப்பட்டுள்ளது.. கடந்த 1990ம் ஆண்டு மே 6ம் தேதி பீகாரில் சஹர்சா ரயில் நிலையத்தில், போலீஸ்காரர் சுரேஷ் பிரசாத் சிங் என்பவர் டியூட்டியில் இருந்துள்ளார். பிளாட்பாரத்தில் கடை போடுபவர்களிடம் லஞ்சம் வாங்குவது சுரேஷின் வாடிக்கையாக இருந்துள்ளது.
இப்படித்தான், சீதாதேவி என்ற பெண், ஸ்டேஷன் பிளாட்பாரத்திலேயே காய்கறி மூட்டைகளை தூக்கி சென்று கொண்டிருந்தார்.. திடீரென சீதாவை வழிமறித்த சுரேஷ், அவரிடமும் லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார். போலீஸை பார்த்ததுமே பயந்துபோன கூலித்தொழிலாளி சீதா, தன்னுடைய புடவையில் முடிந்து வைத்திருந்த 20 ரூபாயை எடுத்து தந்தார்.
போலீஸ்காரர்: வெறும் ரூ.20 மட்டுமே சீதாவிடம் இருப்பது தெரிந்தும், போலீஸ்காரர் சுரேஷ், அதையும் வாங்கி தன்னுடைய பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.. இதை அப்போதைய மேனேஜர் பார்த்துவிட்டு, சுரேஷை கையும் களவுமாக பிடித்து கொண்டுபோய் போலீசில் ஒப்படைத்தார்.. சுரேஷிடம் 20 ரூபாய் லஞ்சப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்குதான் இத்தனை வருடமும் நிலுவையிலேயே இருந்து வந்தது..
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளை விசாரிக்க கோர்ட் நடவடிக்கை எடுக்கும்போதுதான் இந்த வழக்கும், நீதிபதியின் கவனத்துக்கு சென்றது.. உடனே இந்த வழக்கின் ஆவணங்களை பார்வையிட்ட சிறப்பு விஜிலென்ஸ் நீதிபதி சுதேஷ் ஸ்ரீவஸ்தவா, குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமலேயே உள்ளதையும், அதனால் தான் வழக்கு தாமதம் ஆவதையும் கண்டறிந்தார்.
தலைமறைவு: அதுமட்டுமல்ல, போலீஸ்காரர் சுரேஷ் இன்று ரிடையர் ஆகிவிட்ட நிலையில், இப்போது எங்கேயோ தலைமறைவாகவும் இருப்பது நீதிமன்றத்துக்கு தெரியவந்துள்ளது.. எனினும், தலைமறைவான முன்னாள் போலீஸ்காரர் சுரேஷ் பிரசாத் சிங்கை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று டிஜிபிக்கு நீதிபதி த்தரவிட்டார். உடனே போலீஸ் தரப்பும், தலைமறைவான சுரேஷை தேட ஆரம்பித்தனர்.
அப்போதுதான், இந்த வழக்கில் ஜாமின் பெற்ற சுரேஷ், போலியான முகவரி தந்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது. எனவே, இத்தனை தவறுகளையும் செய்த சுரேஷை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் மும்முரமாகி உள்ளனர்..
நீதிபதி உறுதி: உப்பு தின்றவன் தண்ணி குடித்தே ஆகணும் என்று நீதிபதியும் இந்த விவகாரத்தில் உறுதியாக உள்ளார். 34 வருடங்கள் கழித்து, ரூ.20 லஞ்சம் பெற்ற வழக்கில் நீதிமன்றம் தன்னுடைய கவனத்தை செலுத்தியிருப்பது, பெரிதும் கவனம் பெற்று வருகிறது. நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையானது, இது பொதுமக்களுக்கு நிம்மதியையும், தைரியத்தையும் உண்டுபண்ணி வருகிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications