‘குட்பை' பீகார்.. நிதிஷ் குமாருக்கு பதில் புதிய முதல்வராகும் பாஜகவின் சாம்ராட் சவுத்ரி? யார் இவர்?
பாட்னா: பீகார் முதல்வராக செயல்பட்டு வரும் நிதிஷ் குமார் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் ராஜ்யசபா எம்பியாக விரைவில் பொறுப்பேற்க உள்ளார். இதனால் அவர் தனது பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இந்நிலையில் தான் பீகாரின் அடுத்த முதல்வராக பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சாம்ராட் சவுத்ரி யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பீகாரில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக - நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் உள்பட பிற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

ஆனால் பீகார் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மாறாக பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றியது. குறிப்பாக பாஜக 89 தொகுதிகளிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 85 தொகுதிகளிலும் வென்றது. இதையடுத்து நிதிஷ் குமார் 10வது முறையாக பீகார் முதல்வரானார்.
நிதிஷ் குமார் ராஜினாமா
இதற்கிடையே தான் நிதிஷ் குமார் மாநில அரசியலை விட்டு தேசிய அரசியலுக்கு செல்ல முடிவு செய்தார். இதனால் சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் அவர் போட்டியிட்டார். அதில் நிதிஷ் குமார் வெற்றியும் பெற்றார். விரைவில் அவர் ராஜ்யசபா எம்பியாக பொறுப்பேற்க உள்ளார்.
அவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதோடு ராஜ்யசபா எம்பியாவதால் நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். வரும் 14ம் தேதி அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவுக்கு முதல்வர் பதவி?
இந்நிலையில் தான் நிதிஷ் குமாருக்கு பதில் பீகாரின் புதிய முதல்வர் யார்? என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இதுதொடர்பாக தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த முறை கூட்டணி அடிப்படையில் நிதிஷ் குமார் முதல்வர் பதவியை பாஜகவுக்கு விட்டு கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நிதிஷ் குமார் தனது மகன் நிஷாந்த் குமாரை எம்எல்சியாக்கி துணை முதல்வராக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிதிஷ் குமார் ராஜினாமா செய்யும் 14ம் தேதியே பாஜக எம்எல்ஏக்களின் மீட்டிங் நடத்தப்பட்டு அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதல்வராகும் சாம்ராட் சவுத்ரி?
அதன்படி பீகாரின் அடுத்த முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரியின் பெயர் முதலிடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது பாஜக சார்பில் துணை முதல்வராக செயல்பட்டு வருகிறது. மாநில உள்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.
இவர் பீகாரில் பாஜகவின் முகமாக உள்ளார். 2வது முறையாக துணை முதல்வராக செயல்பட்டு வரும் நிலையில் முதல்வர் பதவியில் அமர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர்களுடன் நெருக்கமாக உள்ளார். இதனால் சாம்ராட் சவுத்ரி பீகாரின் அடுத்த முதல்வராகலாம் என்று கூறப்படுகிறது.
இதுதவிர இந்த பட்டியலில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், பீகாரில் தொழில்துறை அமைச்சராக இருக்கும் பாஜகவின் திலீப் ஜெய்ஸ்வால் மற்றும் திகா எம்எல்ஏ சஞ்சீவ் சவுராசியா ஆகியோரின் பெயர்களும் முதல்வர் ரேஸில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் 3 பேரை விட சாம்ராட் சவுத்ரியின் பெயர் தான் 'டாப்' லிஸ்ட்டில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பீகாரில் முதல் முறை
பீகாரில் இதுவரை பாஜகவை சேர்ந்த ஒருவர் முதல்வராக இருந்தது இல்லை. நிதிஷ் குமார் ராஜினாமா காரணமாக பாஜகவை சேர்ந்த ஒருவர் முதல்வரானால் பீகார் வரலாற்றில் முதல் பாஜக முதல்வர் என்ற பெருமையை அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications