பீகாரில் நிதிஷ் குமாருடனான கூட்டணி இயற்கையானது.. ஒப்பந்தம் கிடையாது.. தேஜஸ்வி யாதவ் விளக்கம்!
பாட்னா: பீகாரில் பாஜனதாவுடனான கூட்டணியை உதறிவிட்டு, புதிய கூட்டணியுடன் மீண்டும் நிதிஷ் குமார் முதல்வரான நிலையில், ''தற்போதுள்ள இந்த கூட்டணி இயற்கையானது என்றும், ஒப்பந்தம் கிடையாது" என்றும் தேஜஸ்வ யாதவ் கூறியுள்ளார்.
பீகாரில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்ற நிதிஷ் குமார் அம்மாநில முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
எனினும் ஆட்சி அமைத்ததில் இருந்தே, பாஜகவுடன் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட மனகசப்பு காரணமாக பாஜனதாவுடனான கூட்டணியில் இருந்து விலகி ஆட்சியை கவிழ்த்தார். மேலும் ஆளுநர் மாளிகைக்கு சென்று பாகு சவுகானிடம் ராஜினாமா கடிதத்தையும் அவர் அளித்தார்.

புதிய ஆட்சி
இதைத்தொடர்ந்து பீகார் மாநிலத்தில் ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கொண்டார். தொடர்ந்து இந்த கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதிஷ் குமார் 8-வது முறையாக மீண்டும் பீகார் மாநிலத்தின் முதல்வரானார். ஜேடியூ-ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றார். இந்த புதிய கூட்டணி குறித்து பதிலளித்த பாஜக மூத்த தலைவர், பாஜக கூட்டணியின் காரணமாக தான் அவர் 5 முறை முதல்வர் ஆகியுள்ளார். தற்போது நிதிஷ்குமார் ஆட்சி பெயரில் தான் இருக்கும். உண்மையான முதல்வராக தேஜஸ்வி யாதவ் தான் இருப்பார்" என்று தெரிவித்திருந்தார்.

ஒப்பந்தம் கிடையாது.. இயற்கையானது
இந்த நிலையில், மகாபந்தண் கூட்டணியில் நிதிஷ் குமார் இணைந்தது ஒரு இயற்கையான கூட்டணி எனவும் ஒப்பந்தம் இல்லை என்றும் தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், ஒரு மாதத்திற்குள் நாட்டிலேயே அரசு வேலை அதிகம் அளிக்கும் மாநிலமாக பீகார் மாறும் என்று தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தேஜஸ்வி யாதவ் இது பற்றி கூறியதாவது:- இது (நிதிஷ்குமாருடனான கூட்டணி) இயற்கையான கூட்டணி. ஒப்பந்தம் கிடையாது. லாலுபிரசாத யாதவ் மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரால் இதுதான் உண்மையான மகாபந்தண் கூட்டணி. எங்களுடன் கூட்டணி அமைக்க முன்வந்த நிதிஷ் குமாரின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்" என்றார்.

பாஜக ஸ்டைலை பின்பற்ற மாட்டோம்
பீகாரில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்பது குறித்து பேசிய தேஜஸ்வி யாதவ், "சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற பிறகே இந்த திட்டம் முன்னெடுக்கப்படும். எதிர்க்கட்சிகளை மிரட்டி அச்சுறுத்தும் பாஜக ஸ்டைலை நாங்கள் பின்பற்ற மாட்டோம். நாங்கள் வேலை வாய்ப்பு அளிப்போம். ஒரு மாதத்திற்குள் அரசு துறையில் அதிக வேலைவாய்ப்பு அளித்த மாநிலமாக பீகார் மாறும். இதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்" என்றார்.
Recommended Video

நாட்டுக்கு தேவையானதை செய்வோம்
முன்னதாக கடந்த புதன்கிழமை துணைமுதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டதும் செய்தியாளர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ், வேலைவாய்ப்பின்மை, வறுமை ஆகிய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து புதிய அரசு செயல்படும். நாட்டுக்கு எது தேவையோ அதை பீகார் செயல்படுத்தும். ஏழை மக்களின் வலியையும் வேலை இல்லாத இளைஞர்களின் வேதனையையும் நமது முதல்வர் நன்கு அறிந்தவர். ஒரு மாதத்தில் வேலை வாய்ப்புகள் பெரிய அளவில் இளைஞர்களுக்கு வழங்கப்படும்" எனப் பேசியிருந்தார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications