ஓட்டை பிரித்த ஓவைசி.. முஸ்லிம்களின் கோட்டையில் பாஜக கூட்டணி வென்றது எப்படி? பீகாரில் காங்- RJD ஷாக்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் தான் பீகார் சட்டசபை தேர்தலில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர். இதுபற்றி முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பது பற்றி பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
பீகாரை எடுத்து கொண்டால் கடந்த 2022-23ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஜாதி வாரி கணக்கெடுப்பில் மொத்த மக்கள்தொகை 13.07 கோடியாகும். இதில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 17.7 சதவீதமாகும். குறிப்பாக சீமாஞ்சல் என்ற பிராந்தியத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கின்றனர்.

இந்த பிராந்தியம் என்பது பீகாரில் உள்ள அராரியா, பூர்னியா, கதிஹார், கிஷன்கஞ்ச் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். இந்த மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் நிறைந்து காணப்படுகின்றனர்.
சீமாஞ்சலில் எவ்வளவு இஸ்லாமியர்கள்?
டேட்டா வாரியாக சீமாஞ்சல் பார்த்தால் கிஷன்கஞ்சில் 67.87 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். இதற்கு அடுத்தப்படியாக கதிஹாரில் 44.47 சதவீதம், அராரியாவில் 4.95 சதவீதம், புர்னியாவில் 38.46 சதவீதம் பேர் இஸ்லாமியர்களாக உள்ளனர். இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற இஸ்லாமியர்களின் ஓட்டுகள் மிகவும் முக்கியமாகும்.
இந்த சீமாஞ்சல் பிராந்தியத்தில் இஸ்லாமியர்களுக்கு அடுத்ததாக அதிகம் இருப்பது யாதவ் சமுதாயத்தினர். இவர்கள் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சியின் ஓட்டு வங்கியாக உள்ளன. ஏற்கனவே இஸ்லாமியர்கள், யாதவர்கள் ‛மகாகத்பந்தன்' கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் சீமாஞ்சல் பிராந்தியத்தில் இந்த முறை அந்த கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பாஜக கூட்டணி அதிக வெற்றி
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த சீமாஞ்சல் பிராந்தியத்தில் மொத்தம் 24 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக கூட்டணி 14 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. குறிப்பாக அதிகபட்சமாக பாஜக 7 தொகுதிகளையும், நிதிஷ் குமாரின் ஜேடியூ கட்சி 5 தொகுதிகளிலும், சிராக் பஸ்வானின் எல்ஜேபி (ஆர்வி) கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‛மகாகத்பந்தன்'-னில் காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தேஜஸ்வி யாதவ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மொத்தமாக காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 24ல் 5ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 5 தொகுதிகளில் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த முறையும் இந்த பிராந்தியத்தில் 5 தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் கட்சி வென்ற நிலையில் அதனை அப்படியே தக்க வைத்துள்ளது.
ஓட்டுகள் பிரிந்ததால் பாஜகவுக்கு சாதகம்
இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் இந்த பிராந்தியத்தில் இஸ்லாமியர்களின் ஓட்டுகளை ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும், காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணியும் தனித்தனியாக பிரித்தன. அதேபோல் யாதவ் சமுதாயத்தை சேர்ந்தவர்களின் ஓட்டுகள் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்தது.
அதேவேளையில் இஸ்லாமியர்களின் ஓட்டுகள் குறிப்பிட்ட ஓவைசி கட்சிக்கோ, காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணிக்கு என்று மொத்தமாக கிடைக்கவில்லை.இருவருக்கும் பிரிந்து பிரிந்து கிடைத்தது. இதனை முன்கூட்டியே அறிந்த பாஜக கூட்டணி இஸ்லாமியர்கள், யாதவ் சமுதாயத்தினரிடம் கிடைக்கும் வாக்குகள் போது என்று தொகுதி வாரியாக உள்ள பிற இந்து, சமுதாயத்தை சேர்ந்தவர்களின் வாக்குகளை ஒருங்கிணைத்து அப்படியே பெற்றது. இது இந்த பிராந்தியத்தில் களமிறக்கப்பட்ட பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சாதகமாகி அவர்களை வெற்றியடைய செய்துள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
முந்தைய வரலாறு என்ன?
இதனால் தான் கடந்த 2020 தேர்தலை ஒப்பிடும்போது இந்த பிராந்தியத்தில் பாஜக கூட்டணிக்கு கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளது. கடந்த முறை இந்த சீமாஞ்சல் பிராந்தியத்தில் பாஜக கூட்டணி 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
எதிர்க்கட்சிகளின் ‛மகாகத்பந்தன்' கூட்டணி 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இப்படியாக இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பிராந்தியத்திலும் கூட கடந்த முறையை விட 2 தொகுதிகளில் கூடுதலாக பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
பாஜக - காங்கிரஸ் கூட்டணி பெற்ற சீட் எவ்வளவு?
பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தனித்து ஆட்சியை பிடிக்க 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாறாக பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜக கூட்டணியில் பாஜக 89 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது.
பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 85 தொகுதி, மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் எல்ஜேபிஆர்வி கட்சி எனும் லோக்ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) கட்சி 19 தொகுதி, மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் எச்ஏஎம்எஸ் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்குலர்) கட்சி 5 தொகுதி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எஸ்எச்டிஎல்கேஎம்) கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மாறாக ‛மகாகத்பந்தன்' கூட்டணியில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள சிபிஐ(எம்எல்) (எல்) கட்சி 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐஐபி எனும் இந்தியன் இன்க்ளூசிவ் கட்சி தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த 2 கூட்டணியை தவிர்த்து தனியாக போட்டியிட்ட அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications