Unknown variant.. பீகாரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு.. குழப்பத்தில் மருத்துவர்கள்
பாட்னா: பீகார் மாநிலத்தில் ஒருவருக்கு புதிய வகை உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதத்தில் 2ஆம் அலை உச்சம் தொட்டது. அப்போது தினசரி கேஸ்கள் அதிகபட்சமாக 4 லட்சம் வரை கூட சென்றது. ஆனால், அதன் பின்னர் பல மாதங்கள் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது.
இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றிப்போட்டது. அனைத்து நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்தே வருகிறது.

அதேபோல இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாகவே கொரோனா கேஸ்களின் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல ஓமிக்ரான் பாதிப்பைக் கண்டறிய இந்தியாவில் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பீகார் மாநிலத்தில் சமீபத்தில் கொரோனா உறுதியான 32 பேரின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பப்பட்டது.
பீகாரின் இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கழகத்தில் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அதில் 27 பேருக்குப் பெரிதும் உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், 4 பேருக்கு டெல்டா கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், ஒருவருக்கு இதுவரை கண்டறியப்பட்டதாகப் புதுவித கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications