வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
பெரம்பலூர்: வரும் லோக்சபா தேர்தலில் அமைச்சர் கேஎன் நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் தேர்தல் பிரசாரத்தில் பட்டாசு வெடித்தது, 50க்கும் அதிகமான காரில் சென்றது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அவர் மீது அதிரடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வரும் தேர்தலில் பாரிவேந்தர் பாஜக கூட்டணியில் உள்ளார். பாஜக கூட்டணியில் அவர் மீண்டும் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த முறை தாமரை சின்னத்தில் அவர் களமிறங்கிறார்.
அதேபோல் திமுக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் அமைச்சர் கேஎன் நேருவின் மகன் அருண் நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் என்டி சந்திரமோகன், நாம் தமிழர் சார்பில் ஆர் தேன்மொழி வேட்பாளராக களமிறங்கி உள்ளனர். இந்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தீவிரமாக பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
குறிப்பாக அமைச்சர் கேஎன் நேருவின் மகன் அருண் நேரு தொகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் நேற்று கேஎன் நேரு பிரசாரத்தில் 50க்கும் அதிகமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வாகனங்களை பயன்படுத்த தேர்தல் அதிகாரியிடம் அனுமதி கட்டாயம். ஆனால் அனுமதியின்றி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தேர்தல் பறக்கும் படை அலுவலர் சீனிவாசன் புகாரளித்தார். அதேபோல் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது. இதில் பட்டாசு வெடித்து சிதறியதில் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக லாடபுரம் கிராம நிர்வாக அலுவலர் செந்தில் ராஜா புகாரளித்தார்.
இந்த 2 புகார்களின் அடிப்படையில் அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
-
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம்












Click it and Unblock the Notifications