பெரம்பலூரில் பேப்பரில் எழுதி காட்டி “பில்”.. மதுரையில் பட்டாவுக்கு ரூ.4,000.. அசிங்கமா போச்சு குமாரு

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: தமிழக அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், பொதுமக்கள் எதிர்பார்க்கும் முக்கிய விஷயங்களில் ஒன்று, அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாத நிர்வாகம்... முக்கியமாக, அரசு சேவைகளை பெறுவதற்காக பொதுமக்கள் அதிகாரிகளை அணுகும்போது, "லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும்" என்ற நிலை மாற வேண்டும் என்பதே நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், அப்படி எந்த மாற்றமும் நடக்கவில்லை.. இதோ நேற்றுகூட, ஒரே நாளில் 3 அரசு ஊழியர்கள் அசிங்கப்பட்டு கைதாகி உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் சித்தார்த்தன், 48 வயதாகிறது.. இங்கு பணி முடித்த ஒப்பந்ததாரர் ஒருவர் தனக்கான பில் தொகையை பெறுவதற்காக சித்தார்த்தனை அணுகியுள்ளார். அப்போது, பில் தொகையை வழங்குவதற்காக ரூ.6500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

Perambalur Bill Issue Madurai VAO Case Tamil Nadu Government Officers 4 000

இதையடுத்து அந்த ஒப்பந்ததாரர் ரூ.4,500-ஐ சித்தார்த்தனிடம் கொடுத்துள்ளார். ஆனால், அத்துடன் அவர் நிற்கவில்லை.. மிச்சமுள்ள ரூ.2000-ஐயும் உடனே தர வேண்டும் என்று கறார் காட்டியுள்ளார்.. அதுவும் எப்படி தெரியுமா? ஒரு பேப்பரில் எழுதி அந்த ஒப்பந்ததாரரிடம் காட்டினாராம்..

பெரம்பலூர், மதுரை

இந்த காட்சியை அப்படியே ஒப்பந்ததாரர் வீடியோவாக பதிவு செய்து சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில், பெரம்பலூர் கலெக்டர் ஷரண்யா அரி, சித்தார்த்தனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

பெரம்பலூரில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மதுரையிலும் ரூ.4,000 லஞ்சம் வாங்கியதாக பெண் விஏஓ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை திருநகர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் மதுமித்ரன், 33. ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், கடந்த ஆண்டு தனது பெயரிலும், மனைவி புஷ்பலதா பெயரிலும் 2 வீட்டு மனைகளை வாங்கி பத்திரப்பதிவு செய்திருந்தார். ஆனால், மனைவி பெயரில் மட்டும் பட்டா வழங்கப்பட்ட நிலையில், தனது பெயரிலும் பட்டா பெறுவதற்காக மதுமித்ரன் வருவாய்த்துறையில் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.

45 வயது பெண் அதிகாரி

இந்த விண்ணப்பம் தொடர்பாக அவரை தொடர்பு கொண்ட வேடர்புளியங்குளம் விஏஓ. யாசியாபானு, ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் 2 பேருக்குமே இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ரூ.4,000 கொடுத்தால் போதும் என தொகை குறைக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து மதுமித்ரன் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. சத்தியசீலனிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் திட்டமிட்டபடி, யாசியாபானுவிடம் பணத்தை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மதுமித்ரனை தொடர்பு கொண்ட யாசியாபானு, மதுரை பசுமலை மூலக்கரை ஸ்டாப் அருகே வருமாறு தெரிவித்துள்ளார்.

அங்கு வந்த யாசியாபானு, மதுமித்ரனிடம் ரூ.4,000 பணத்தை பெற்றுக்கொண்டு தனது ஸ்கூட்டியில் வைத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் யாசியாபானுவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 45 வயதாக யாசியாபானு கைதாவதை சுற்றியிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர்.

100 நாட்களில் ஊழல் ஒழிப்போம்

அதாவது, ஒரு சம்பவத்தில் ஒப்பந்ததாரரிடம் ரூ.6,500 கேட்டு, ரூ.4,500 வாங்கிய பிடிஓ சித்தார்த்தன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு சம்பவத்தில் பட்டா வழங்குவதற்காக ரூ.5,000 கேட்டு, இறுதியில் ரூ.4,000 பெற்ற பெண் வி.ஏ.ஓ. யாசியாபானு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2 சம்பவங்களும் வெவ்வேறு மாவட்டங்களில் நடந்திருந்தாலும், பொதுமக்களின் அடிப்படை அரசு பணிகளுக்காகவே லஞ்சம் கேட்டிரக்கிறார்கள்.. "ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் லஞ்சத்தை ஒழிப்போம்" என்று சொன்ன தவெக, அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கப்படும் சூழலை எப்போது முழுமையாக கட்டுப்படுத்தும்? லஞ்சம் வாங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஒருபுறம் என்றால், லஞ்சமே கேட்க முடியாத நிர்வாகத்தை உருவாக்குவது எப்போது என்பதே அடுத்த கேள்வியாக கிளம்பியிருக்கிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+