பெரம்பலூர் டீச்சரை காணோமாமே.. கரெக்ட்டா அந்த மாணவனும் மிஸ்ஸிங்.. குழந்தையுடன் மனைவியை தேடும் கணவர்
பெரம்பலுார்: பெரம்பலூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார் அப்பேராசிரியை.. ஆனால், அவர் இப்போது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை.. எனவே, போலீசார் விரிவுரையாளரை தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள்.
நம்முடைய நாட்டில் பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் நாளுக்கு நாள் வன்முறைகள் அதிகரித்தபடியே வருகின்றன.. இவைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. அதேபோல, பெண் குழந்தைகளின் நலன் காப்பதற்காகவே போக்சோ உள்ளிட்ட எண்ணற்ற சட்டங்களும் அமலில் உள்ளன.. இவை அனைத்துக்கும் மேலாக, பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றுபவர்களை, தண்டிக்க நீதிமன்றங்களும் துணை நிற்கின்றன..

ஆண் குழந்தைகள்: இவ்வளவு இருந்தும்கூட, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. சமீபகாலமாக , சிறுவர்களுக்கும் பாதுகாப்பின்மை நிலவுவது அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. அதிலும் பெண்களே போக்சோவில் கைதாகி வருவது கவலையை தந்து வருகின்றன. அப்படி கைதாகும் பெண்களில், ஆசிரியைகளும் அடக்கம் என்பது உச்சக்கட்ட வேதனையை ஏற்படுத்தி வருகிறது. இதோ நம்ம பெரம்பலூரில் ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது.
பெரம்பலுார் மாவட்டம், துறைமங்கலம் புதுகாலனியைச் சேர்ந்தவர் ஜான்ஜெபராஜ். இவரது மனைவி சீலியா கரோலின்.. 27 வயதாகிறது.. பெரம்பலுார் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த கல்லூரி, ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
வழக்கு பதிவு: இந்த தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த, 24ம் தேதி கல்லுாரிக்கு சென்ற சீலியா கரோலின் வீடு திரும்பவில்லை. இதனால் மனைவியை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், ஜான் ஜெபராஜ் பெரம்பலுார் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.
அப்போதுதான், சீலியா கரோலினும், அதே கல்லுாரியில் BCom மூன்றாமாண்டு படிக்கும், 20 வயது மாணவனும் நெருங்கி பழகியது தெரியவந்தது. இவர்கள் இருவருமே திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்ததாகவும், அதற்காகவே தற்போது வெளியூர் சென்று தங்கி இருப்பதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்களாம்.
ஒரே நாளில் மாயம்: சம்பந்தப்பட்ட யூனிவர்சிட்டியில் கடந்த 6 மாதத்துக்கு முன்புதான் விரிவுரையாளராக வேலைக்கு சேர்ந்தாராம் பேராசிரியை.. சம்பந்தப்பட்ட மாணவர் சர்க்கார் கேணி என்ற பகுதியில் வசித்து வருபராம். இவருடன்தான் அடிக்கடி செல்போனிலும் ஆசிரியை பேசி வந்துள்ளார்.. பேராசிரியை காணாமல் போன தினத்தன்றுதான், மாணவனும காணாமல் போனதால், போலீசாருக்கு சந்தேகம் அதிகமாகியிருக்கிறது.
எனவே, மாணவனுடன் தலைமறைவாகியிருக்கிறாரா? அல்லது டீச்சரை யாராவது கடத்தி சென்றுவிட்டாரா? என்ற கோணங்களிலும் விசாரணை நடக்கிறது.
அச்சுறுத்தல்: குருவாக மதிக்கப்பட வேண்டிய ஆசிரிய, ஆசிரியைகள், ஒழுக்கத்தையும், நன்னடத்தையும் மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டியவர்களே, இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவது பெற்றோர்களுக்கு கலக்கத்தையும், சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications