பிளஸ் 2 தேர்வில் 9 லட்சம் பேர்… முறைகேடுகளை தடுக்க… களத்தில் 4,000 பேர் கொண்ட பறக்கும் படை

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று துவங்கியது. தேர்வில் 9 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.

இன்று தொடங்கும் பிளஸ் 2 தேர்வு மார்ச் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2944 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த மையங்களில் தேர்வு துவங்கி இருக்கிறது.

Plus 2 exam started today and 9 lakh 2 students appeared in exam

முதல்முறையாக 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தேர்வை 4,60,000 மாணவர்களும், 4 லட்சம் மாணவிகள் மற்றும் 2 திருநங்கைகள் எழுதுகின்றனர். 45 கைதிகள் பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர். 2,400 மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வின் போது கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 15 நிமிடம் சலுகை இந்த ஆண்டும் அளிக்கப்படுகிறது. அந்த நேரத்தை கேள்வித்தாள் படித்துப் பார்க்கவும், விடைத்தாள் முகப்பில் விவரங்கள் குறிக்கவும் பயன்படுத்த வேண்டும்.

கேள்வித்தாளை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு போல இல்லாமல் இந்த ஆண்டுக்கான கேள்வித்தாளில் சில மாற்றங்களை தேர்வுத்துறை செய்துள்ளது.4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

[Read more: முக்கிய பிரச்சனைகளில் மறந்துவிட்டு.. இப்போது மட்டும் வருவது ஏன்.. மோடிக்கு எதிரே பொங்கும் தமிழர்கள்]

பொதுத் தேர்வின் போது கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 15 நிமிடம் சலுகை இந்த ஆண்டும் அளிக்கப்படுகிறது. தேர்வு மைய வளாகத்துக்குள் ஆசிரியர்களும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையினர், தேர்வு மையங்களில் சோதனையில் ஈடுபடும் போது மாணவர்களை பயமுறுத்தும் வகையில் செயல்படக்கூடாது என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+