முக்கிய பிரச்சனைகளில் மறந்துவிட்டு.. இப்போது மட்டும் வருவது ஏன்.. மோடிக்கு எதிரே பொங்கும் தமிழர்கள்
பிரதமர் மோடி முக்கிய பிரச்சனைகளின் போது தமிழகத்தை மறந்துவிட்டு இப்போது மட்டும் தமிழகம் வருவது ஏன் என்று தமிழர்கள் பலர் டிவிட்டரில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
சென்னை: பிரதமர் மோடி முக்கிய பிரச்சனைகளின் போது தமிழகத்தை மறந்துவிட்டு இப்போது மட்டும் தமிழகம் வருவது ஏன் என்று தமிழர்கள் பலர் டிவிட்டரில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
கன்னியாகுமரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். அவர் கன்னியாகுமரியில் நடக்க உள்ள அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையை எதிர்த்து எப்போதும் போல தமிழர்கள் பலர் போராடி வருகிறார்கள். இதனால் டிவிட்டரில் #GoBackModi ஹேஷ்டேக் வைரலாகி உள்ளது.
[Read more: கன்னியாகுமரியில் மோடியை கண்டித்து வைகோ போராட்டம்... பாஜகவினர் கல்வீச்சு... திடீர் பதற்றம்]

பெரிய வைரல்
இந்த டேக் தற்போது தேசிய அளவில் வைரலாகி உள்ளது. தேசிய அளவில் டிரெண்டாகி இந்த டேக் முதலிடம் பிடித்து உள்ளது. இதில் நேற்று இரவில் இருந்து தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கு எதிராக டிவிட் செய்து வருகிறார்கள்.

என்ன கூறுகிறார்கள்
இதில் மோடிக்கு எதிராக நிறைய கருத்துக்கள் வைக்கப்பட்டு, கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. முக்கியமாக ஓகி புயலின் போது குமரி மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டது. ஆனால் ஒரு பாஜக எம்.பி குமரியில் இருந்து தேர்வு செய்யப்பட்டும் கூட, பிரதமர் மோடி சேதங்களை பார்வையிட வரவில்லை. அதேபோல் குமரி மக்களுக்கு போதுமான நிவாரணமும் வழங்கப்படவில்லை.

தமிழக பிரச்சனை
அதேபோல் தென் மாவட்டங்களை அதிகம் பாதித்த தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையான ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, வார வாரம் கைது செய்யப்படும் குமரி மீனவர்கள் என முக்கியமான விஷயங்கள் எதையும் பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து அறிக்கையோ, பேட்டியோ கூட அவர் கொடுக்கவில்லை.

கேள்வி மேல் கேள்வி
அதேபோல் கஜா புயல், விவசாயிகள் போராட்டம், குரங்கணி தீ விபத்து என்று தமிழகத்தின் வேறு எந்த விதமான பிரச்சனை குறித்தும் அவர் பேசவில்லை. ஆனால் இவ்வளவு நடந்த பின் வராமல் தேர்தல் நேரத்தில் மட்டும் பிரதமர் மோடி தமிழகம் வருவது ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளார். தேர்தல் நேரத்தில்தான் தமிழகம் கண்ணுக்கு தெரிகிறதா என்று #GoBackModi ஹேஷ்டேக்கில் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications