பாஜக எம்எல்ஏ வெங்கடேஷன் வீட்டில் 15 பவுன் திருட்டு.. புதுச்சேரியில் தந்தை அறைக்குள் நுழைந்து கைவரிசை
புதுச்சேரி: புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏ வெங்கடேஷன் வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகை திருடப்பட்டுள்ளது. வீட்டில் அவரது தந்தை கலியப்பெருமாள் வசிக்கும் அறைக்குள் நுழைந்தவர் பீரோவை திறந்து நகையை திருடி சென்றுள்ளார். இதுதொடர்பாக வீட்டில் பணியாற்றும் டிரைவர், பணிபெண்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான நாராயணசாமி முதல்வராக உள்ளார். புதுச்சேரி சட்டசபைக்கு எம்எல்ஏக்கள் 2 முறைகளில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஒன்று தேர்தலில் மக்களால் ஓட்டளித்து எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இன்னொன்று எம்எல்ஏ நியமனம் செய்யப்படுகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏவாக இருப்பவர் வெங்கடேஷன்.
எம்எல்ஏ வெங்கடேஷனின் வீடு வீடு நகரின் மையப்பகுதியாக இருக்கும் முத்துமாரிஅம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ளது. வீட்டின் முதல் மாடியில் எம்எல்ஏ வெங்கடேஷனின் தந்தை கலியப்பெருமாள் வசித்து வருகிறார். அவர் முதியவராக உள்ளார். இதனால் வீட்டில் வேலைக்காரர்கள், டிரைவர்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் அவரது வீட்டு பீரோவின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதை பார்த்த டிரைவர் உடனடியாக கலியப்பெருமாளிடம் தெரிவித்தார். குடும்பத்தினர் வந்து பீரோவை பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருந்தது. இதையடுத்து குடும்பத்தினர் வீட்டின் அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தனர்.
அப்போது தங்க சங்கிலி கிடைக்கவில்லை. அப்போது தான் யாரோ அதனை திருடி சென்றிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து எம்எல்ஏ வெங்கடேஷனின் மகன் பாலாஜி சார்பில் பெரியக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
மேலும் எம்எல்ஏ வெங்கடேஷனின் தந்தை கலியப்பெருமாள் இருக்கும் அறைக்குள் வெளியாட்கள் யாரும் சாதாரணமாக நுழைய முடியாது. இதனால் நன்கு தெரிந்த ஆட்கள் தான் கலியப்பெருமாள் இல்லாத நேரம் பார்த்து பீரோவை திறந்து தங்க சங்கிலியை திருடி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
இதனால் வீட்டில் பணியாற்றும் 2 டிரைவர்கள், பணிப்பெண்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications