அம்மாவுடன் நட்பு.. 16 வயது மகளுடன் "உல்லாசம்".. சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூரன்.. பரபர சம்பவம்
காரைக்கால்: காரைக்காலில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் சிறுமி மயங்கி விழுந்ததையடுத்து செய்யப்பட்ட பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவம் வெளிவந்துள்ளது.
சிறுமியின் தாயுடன் நட்பாக பழகி வந்த இந்த இளைஞர் தாயின் 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

நட்பு
காரைக்காலில் பெண் ஒருவர் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் வீடு வரை நீண்டுள்ளது. இளைஞர் இயல்பாக பழகுவதால் தாய் தன்னுடைய 16 வயது மகளை இளைஞருக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அவர்களும் இயல்பாக பழகி வந்துள்ளனர். இதனால் தாய்க்கு சந்தேகம் எதுவும் எழவில்லை. இதனையடுத்துதான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திடீர் மயக்கம்
சிறுமி வழக்கம் போல நேற்று பள்ளிக்கு சென்றுள்ளார். நண்பர்களுடன் சாதாரணமாக பேசி விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென மயக்கமடைந்துள்ளார். பதறிப்போன நண்பர்கள் உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கையில், ஆசிரியர்கள் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவ பரிசோதனையில் உண்மை வெளிவந்துள்ளது. அதாவது மாணவி கர்ப்பமாக இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

நெருக்கமாக பழக்கம்
இதனையடுத்து, மாணவியின் தாய்க்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் என்ன செய்வதென்று தெரியாமல் உறைந்து போயுள்ளார். பின்னர், இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர். அதாவது தாய் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், அவருடன் நட்பாக பழகி வந்த இளைஞர் நாளடைவில் சிறுமியிடம் நெருக்கமாக பழகத் தொடங்கியுள்ளார்.

கர்ப்பம்
பின்னர் ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரங்களின்படி 2020லிருந்து 2021வரை குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 16.2 சதவிகிதம் அதிகரித்துள்ளன. இந்தியாவை பொறுத்த அளவில் இந்த குற்ற வரிசையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்திலும் இந்த குற்றங்கள் அதிக அளவில் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications