நைட்டு 2 மணிக்கு.. கடைக்குள் நுழைந்த ஆசாமி.. ஜஸ்ட் 5 நிமிசம் தான்.. அலறிய புதுச்சேரி!
புதுச்சேரி: புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள மதுபானக்கடையை நள்ளிரவில் மர்ம நபர் உடைத்து கல்லா பெட்டியில் இருந்த பணத்தை அள்ளிச்செல்லும் சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.
Recommended Video
கொரோனா காலத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை குறித்து வைத்து குடிமகன்கள் திருடிய சம்பவத்தை பார்த்திருப்போம். மதுபாட்டில்களை எப்படியாவது குடித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் பலரும் மதுக்கடைகளை உடைத்து திருடினார்கள்.
இதேபோல் புதுச்சேரி மாநிலத்திலும் நடந்தன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளது. இதை பயன்படுத்தி புதுச்சேரியில் திருட்டு சம்பவங்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுக்கடை உடைப்பு
அந்த வகையில் புதுச்சேரி நடேசன் நகரில் மதுபானக்கடை உள்ளது. இந்த கடையை உரிமையாளர் இரவு பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையினர பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கள்ளாபெட்டியில் இருந்த பணம் திருடு போய் இருந்தது தெரியவந்தது.

நள்ளிரவு 2 மணி
இதுகுறித்து கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் படி ரெட்டியார்பாளையம் போலிசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கடையில் இருந்த சிசிடிவை ஆய்வு செய்த போது நள்ளிரவு 2 மணியளவில் கடையை உடைத்து உள்ளே வந்துள்ளான் கெள்ளையன்.

அள்ளிய கொள்ளையன்
கல்லா பெட்டியை உடைத்து அதில் இருந்த பணத்தை அள்ளி செல்லும் சிசிடிவி கேமரா காட்சி பதிவாகியிருந்தது. சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையனை புதுச்சேரி ரெட்டியார்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.

என்ன காட்சி
சிசிடிவி கேமராவை பற்றி கவலைப்படாமல் முகத்திற்கு மாஸ்கு கூட அணியாமல் சர்வசாதாரணமாக பாலத்தீன் கவரை தேடி எடுத்து பணத்தை அள்ளிப்போட்டு செல்கிறார் அந்த கொள்யைன். இந்த விடியோ வைரலாகி வருகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications