தோண்ட தோண்ட பூதாகரமாகும் புதுச்சேரி போலி மாத்திரை.. மாஜி ஐஎப்எஸ் கைது.. ஜிஎஸ்டி அதிகாரியுமா?
புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மாத்திரை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் , டி.ஜி.பி. ஷாலினி சிங் உத்தரவின்பேரில் , எஸ்பி பழனிவேலு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. இவ்வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரியை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். ஜி.எஸ்.டி. துறையில் அதிகாரியிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரும் கைதாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய மருந்து கம்பெனிகளில் ஒன்று 'சன்பார்மசி' நிறுவனம். டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தின் பெயரில் புதுச்சேரியில் போலி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு பல மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புகார் எழுந்ததால், சம்பவ இடத்திற்கு புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் புதுவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த சென்றார்கள்.

சோதனை நடந்தது
அதன்படி புதுச்சேரியில் உள்ள மேட்டுப்பாளையம், திருபுவனைபாளையம் ஆகிய இடங்களில் 2 தொழிற்சாலைகளிலும் தயாரித்து, குடோன்களில் பதுக்கி போலி மாத்திரைகள் தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர். இதேபோல் தவளக்குப்பம் பகுதியில் 2 வீடுகளில் போலி மாத்திரைகள் ஏராளமான பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மாத்திரைகள், மூலப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணம் பறிமுதல் செய்தார்கள்.
குடோன்கள் சீல் வைப்பு
இதையடுத்து புதுச்சேரி அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறை தலைவர் சவுத்ரி முகமது யாசின் தலைமையிலான அதிகாரிகள் மருந்து தொழிற்சாலைகள், மொத்த மருந்து விற்பனையாளர்கள், குடோன்கள் என 13 இடங்களுக்கு 'சீல்' வைத்தனர்.. இதேபோல் 15 மருந்து தயாரிப்பு முறைகள், 20 மருந்து மூலப்பொருட்கள் மாதிரிகள் சேகரிப்பட்டு சென்னை மத்திய மருந்து சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
தனிப்படை அமைப்பு
இந்தநிலையில் போலி மாத்திரை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் புதுச்சேரி டி.ஜி.பி. ஷாலினி சிங் உத்தரவின்பேரில் எஸ்பி பழனிவேலு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. இவ்வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொழிற்சாலை உரிமையாளரான ராஜாவை கடந்த 18-ந் தேதி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.
உண்மையை கூறிய ராஜா
போலி மாத்திரைகள் தயாரிக்கவும், அவற்றை விற்பனை செய்யவும், அதற்கு உடந்தையாகவும், உறுதுணையாக உள்ளவர்கள் விவரங்கள் குறித்து ராஜாவிடம், போலீசார் கூறினாராம். அதன்படி இவ்வழக்கில் ராஜாவுக்கு உதவியாக விருப்ப ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி சத்தியமூர்த்திக்கு (வயது 44) தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. அதன்படி ராஜா நடத்திய வந்த போலி மாத்திரை தொழிற்சாலைக்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்த புதுச்சேரியில் வனத்துறையில் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரியான சத்தியமூர்த்தி உதவியாக இருந்தது தெரிய வந்தது. இதற்காக அவருக்கு சில கோடிகளை கைமாறியதாக புகார்கள் எழுந்துள்ளது.
ஓசூரில் முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி கைது
இந்த தகவல் கசிந்ததால் ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி தலைமறைவானார். தமிழகத்தில் ஓசூரில் பதுங்கியிருந்தவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் அதிரடியாக கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், போலி மாத்திரை தொழிற்சாலைக்கு ஜி.எஸ்.டி. செலுத்த உதவியாக அங்கு பணியாற்றி வரும் கண்காணிப்பாளர் பரிதா என்பவர் உதவியதாக கூறினார்.
ஜிஎஸ்டி அதிகாரி சிக்குகிறார்
இதையடுத்து பரிதாவையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவரும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து அரசு அதிகாரிகள் சிக்கி கைதாவதால் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இந்த வழக்கை சி.பி.ஐ. மற்றும் என்.ஐ.ஏ. விசாரிக்கவும் புதுவை கவர்னர் கைலாஷ்நாதன் பரிந்துரைத்துள்ளார். எனவே விரைவில் சி.பி.ஐ., என்.ஐ.ஏ. விசாரிக்க போகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications