புதுச்சேரி-காரைக்கால் பள்ளிகளுக்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறை.. கனமழையால் வெளியான புதிய அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் நாளை (நவம்பர் 4), நாளை மறுநாள் (நவம்பர் 5) ஆகிய 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். இதன்மூலம் நாளை முதல் 3 நாட்கள் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு விடுமுறையாகும்.
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய அறிவிப்பை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

கடந்த 2 நாட்களாக பல இடங்களில் மழை வெளுத்து வாங்கும் நிலையில் இன்னும் சில நாட்கள் இதேநிலை தொடரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கனமழையின் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 4), நாளை மறுநாள் (நவம்பர் 5) என இரண்டு நாட்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தொடர் கனமழையின் காரணமாக இன்று (நவம்பர் 3)ம் தேதி புதுச்சேரி, காரைக்காலில் உள்ள தனியார், அரசு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு இருந்த நிலையில் தொடர்ந்து 2வது நாளாக நாளையும், 3வது நாளாக நாளை மறுநாளும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு நவம்பர் 6 ம் தேதி என்பது ஞாயிற்றுக்கிழமையாகும். இதனால் பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications