புதுச்சேரி தேர்தலை புறக்கணிக்க தயார்... துணைநிலை ஆளுநர் அதிகாரம் குறித்து.. ரங்கசாமி விமர்சனம்
புதுச்சேரி: தனக்குத்தான் அதிகாரம் என்று சற்று மாறுபட்ட நிலையில் துணைநிலை ஆளுநர்கள் செயல்படுவதாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த முதலமைச்சர் ரங்கசாமி கடுமையாக சாடினார். மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக உள்ளோம். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தயார்தான். நீங்கள் தயாரா என்று எதிர்க்கட்சி தலைவரை பார்த்து கேள்வி எழுப்பினார்? மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வலியுறுத்தி அனுப்புவோம் என்றும் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 3-வது பகுதி இன்று காலை 9:30 மணிக்கு கூடியது. சபாநாயகர் செல்வம் திருக்குறளை வாசித்து பேரவை தொடங்கி வைத்தார், தொடர்ந்து மறைந்த முன்னாள் எம்எல்ஏ சுப்புராயன், முன்னாள் நீதிபதி தாவீது அன்னுசாமி,மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் ஆகியோர் மறைவிற்கு அவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது, மேலும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள சிலம்பாட்ட கலைஞர் பழனிவேலுக்கு அவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இதில் ஐந்து மாத செலவுகளுக்கான 5,396 கோடி ரூபாய் காண இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
தொடர்ந்து புதுச்சேரி சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசுகையில், சட்டசபையில் எதிர்கட்சிகள் மாநில அந்தஸ்து பல்வேறு பணிகள் நிலுவையில் உள்ளது பற்றி பேச வேண்டும் என வலியுறுத்தினார்கள். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.தலைமை செயலர் மதிப்பதில்லை. புதுச்சேரி எங்கும் போராட்டம் நடக்கிறது. ஒப்பந்த ஆசிரியர்கள், தற்காலிக பொதுப்பணி ஊழியர்கள், தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர்.
இந்த போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வரவில்லை. இரட்டை என்ஜின் அரசு என கூறினீர்கள். தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. இலவசங்களை மட்டும் மக்களுக்கு அளித்துள்ளீர்கள். வளர்ச்சிக்கான திட்டங்களான மேம்பால பணி தொடங்கவில்லை. விமான நிலைய விரிவாக்கம் செய்யவில்லை.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி.. மாநில அந்தஸ்து மிக மிக அவசியம்.. 1991 ல் இருந்து சட்டமன்றத்திற்கு வருகிறேன்.. அப்போது இருந்த துணைநிலை ஆளுநர்களின் நிலை வேறு, இப்போது சற்று மாறுபட்ட நிலையில் "தனக்கு தான் அதிகாரம்" என துணைநிலை ஆளுநர்கள் உள்ளனர், சங்கடமான நிர்வாக சூழ்நிலையில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்,சிலவற்றை செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார்.
இதனிடையே விவாதத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசுகையில், மாநில அந்தஸ்துக்காக டெல்லிக்கு அழைத்து செல்வோம் என கூறினீர்கள். ஆனால் செய்யவில்லை. உங்களை நம்பி மக்கள் வாக்களித்தனர். மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்க தயாரா? என்று முதல்வர் ரங்கசாமியை பார்த்து கேள்வி எழுப்பினார்.
அப்போது முதல்வர் ரங்கசாமி குறுக்கிட்டு, தேர்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக உள்ளோம். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தயார்தான். நீங்கள் தயாரா? மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வலியுறுத்தி அனுப்புவோம் என்றார். கூட்டத்தின் இறுதியில் எதிர்கட்சி தலைவர் சிவா பேசும்போது, ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து தேர்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து பேசி முடிவு செய்யுங்கள் என்றார்
இதனை அடுத்து சட்டப்பேரவையை சபாநாயகர் செல்வம் காலை வரை இன்றி ஒத்தி வைப்பதாக தெரிவித்தார். இன்று காலை 9:38 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவை 11:54க்கு நிறைவடைந்தது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications