புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காகிதங்கள் இனி தேவையில்லை... புதுச்சேரி சட்டப்பேரவை கணினிமயமாகிறது

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் அனைத்து நடவடிக்கைகளையும், காகிதமில்லாமல் மின்னணு முறையில் நடத்துவது மற்றும் முற்றிலும் சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தையும் கணினிமயமாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இன்று சட்டப்பேரவை செயலக பணியாளர்களுக்கு புதுச்சேரி அரசு தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகளால் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும், சட்டப்பேரவை செயலர் உள்ளிட்ட ஏராளாமன அதிகாரிகள் பங்கேற்றனர்.

Computerization throughout the Puducherry assembly

காகிதமில்லா பேரவை நடத்துவது தொடர்பாக சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் கூறுகையில், பேரவையில் காகிதமில்லா முறையை அமுல்படுத்தும் போது, பேரவை கூட்டத்திற்கு முன்பாக சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளை ஆன்லைன் மூலம் பெறப்பட்டு, அவற்றை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி, ஆன்லைன் மூலம் பதில் பெறப்படும் என்றும்,

Computerization throughout the Puducherry assembly

பேரவையில் உறுப்பினர்கள் பேசுவதை அப்படியே மின்னணு முறையில் பதிவு செய்யவும், பேரவையில் ஓட்டெடுப்பு உள்ளிட்ட செயல்பாடுகளை உறுப்பினர்கள் மின்னணு முறையிலே கையால முடியும் என்றும், அலுவல் ஆய்வு நடைமுறைகளை ஆன்லைன் மூலமே தெரிந்து கொள்ளும் வசதியும் உருவக்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் பணிகளின் நேரம் மற்றும் காகிதப் பரிமாற்றம் குறையும் என வின்சென்ட் ராயர் தெரிவித்தார்.

Computerization throughout the Puducherry assembly

இதற்கிடையில், புதுச்சேரியில் வருகிற ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதால் இனி கால அவகாசம் வழங்க முடியாது என்று அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார். இதனால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Computerization throughout the Puducherry assembly
English summary
Computerization throughout the Puducherry assembly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X