வங்கி கணக்கு முடியுது.. ஓடிபி வந்ததா?.. அக்கவுண்ட் கேன்சல் ஆயிரும்".. அலர்ட் மக்களே.. போலீஸ் வார்னிங்
புதுச்சேரி: வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் உள்ளதா? காவல்துறை முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது தொடர்பாக அறிவுறுத்தலையும் வழங்கியிருக்கிறது.
சமீபகாலமாகவே, வங்கிகளின் பெயர்களை சொல்லி மோசடி வேலைகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.. அதனால்தான், வாடிக்கையாளர்கள் யாரும், தங்களுடைய வங்கிக்கணக்கு குறித்த அனைத்து விவரங்களையும் ரகசியமாக வைக்க வேண்டும், யாரிடமும் பகிர வேண்டாம். மோசடியாளர்கள் புதுவிதமான வகையில் அணுகலாம் என்று வங்கிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன.

பாஸ்வேர்டு: வங்கியிலிருந்து பேசுகிறோம், மாதத்தவணையிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக விவரங்களை சொல்லுங்கள், வங்கிக்கணக்கு ஓடிபி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டின் சிவிவி எண், பாஸ்வேர்டு, அக்கவுண்ட் நம்பர் என்ன? என்றெல்லாம் கேட்டு மோசடியில் ஈடுபடலாம்.. அதனால், வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இருந்து எந்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டாம் என்று எத்தனையோ முறை போலீசார் வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளனர்.
ஆனாலும், மோசடிப்பேர்களின் பிடியில் சில அப்பாவிகள் சிக்கிவிடுகிறார்கள்.. இதோ நேற்றுகூட புதுச்சேரியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. புதுச்சேரி அரவிந்தர் வீதியை சேர்ந்தவர் வைத்தியநாதன்.. 61 வயதாகிறது.. புதுவையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ளார். இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர், வங்கியில் இருந்து மேனேஜர் பேசுவதாக சொல்லியிருக்கிறார்..
வங்கிக்கணக்கு: "உங்களது வங்கிக்கணக்கு இன்றுடன் காலாவதி ஆகிறது... இதை உடனே தவிர்க்க வேண்டுமானால், உங்கள் செல்போனுக்கு ஒரு ஓடிபி வரும். அதை சொன்னால், உங்களது வங்கி கணக்கை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க, தன்னால் முடிந்த உதவியை செய்கிறேன்" என்று சொல்லி உள்ளார்.
உடனே வைத்தியநாதனும், தன்னுடைய செல்போனுக்கு வந்த, ஓடிபி நம்பருடன் ஆதார் நம்பர், பான் கார்டு, வங்கிக்கணக்கு என எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே, வைத்தியநாதனின் பேங்க்கில் இருந்த ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக, மெசேஜ் வந்துள்ளது..
செல்போன் நம்பர்: இதைப்பார்த்துதம் பதறிப்போன வைத்தியநாதன், அந்த வங்கியின் மேலாளரின் செல்போன் நம்பருக்கு போன் செய்துள்ளார். ஆனால், ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டிருந்தது. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று உணர்ந்த வைத்தியநாதன், உடனடியாக சைபர்கிரைம் போலீசுக்கு ஓடினார்.. நடந்ததையெல்லாம் சொல்லி புகார் தரவும், அது தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது.
அந்த மர்ம நபர் யார் என்று இதுவரை தெரியவில்லை.. ஆனால், இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பொதுமக்களுக்கு ஒரு அலர்ட் தந்துள்ளார்.
போலீஸ் அலர்ட்: பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை யாருக்குமே தெரிவிக்க வேண்டாம். வங்கி மேலாளர்கள் ஒருபோதும் ஓடிபி கேட்கவே கேட்கவே மாட்டார்கள். அதனால், யாரேனும் உங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு வந்த ரகசிய எண்ணை கேட்டால், தெரிவிக்க வேண்டாம்.. இணைப்பையும் துண்டித்துவிடுங்கள்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications