புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீனவர்களும் விவசாயிகள்தான்...அவர்களுக்கும் சலுகை கிடைக்க வேண்டும் - புதுவையில் பேசிய ராகுல்காந்தி

விவசாயிகளை போல் மீனவர்களுக்கும் சலுகை கிடைக்க வேண்டும் என ராகுல்காந்தி கூறியுள்ளார். புதுச்சேரியில் மீனவ பெண்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

புதுச்சேரி: விவசாயிக்கு ஒரு பிரச்சனை என்றால் விவசாய துறை அமைச்சர் உள்ளார். ஆனால் மீனவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்கள் யாரிடம் சொல்லவர்கள் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி கூறியுள்ளார். அதற்கு தான் மத்திய அரசில் ஒரு மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்க்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்றும், மீனவ மக்களை கடலில் விவசாயம் செய்பவர்களாக பார்ப்பதாக மீனவ மக்களுடன் உரையாடியபோது ராகுல் காந்தி பேசினார். பெரு முதலாளிகளுக்கு பல கோடிகளை மத்திய அரசு கடனாக கொடுத்துள்ளதாகவும், ஏழை மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதே இந்த பிரச்சனைக்கும் நீங்கள் முன்னேறி செல்வதற்கும் தீர்வு என ராகுல் காந்தி பேசினார்.

Fisherman The Farmer Of The Sea says Rahul Gandhi

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் புதுச்சேரி வந்தடைந்தார். தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் சோலை நகர் கடற்கரையோர மீனவ கிராமத்திற்கு சென்று மீனவ பெண்கள் மற்றும் மீனவ மக்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, உங்கள் கருத்துகளை கேட்பதற்காகவே வந்துள்ளேன் என்றும், மத்திய பா.ஜ.க அரசு 3 விவசாய சட்டங்களை நிறைவேற்றியதால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு என்றும், மீனவ மக்களை கடலில் விவசாயம் செய்பவர்களாக பார்கிறேன் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார். மத்தியில் மீனவர்களுக்கு அமைச்சர் தனியாக இல்லை, விவசாயிக்கு ஒரு பிரச்சனை என்றால் விவசாய துறை அமைச்சர் உள்ளார். ஆனால் மீனவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்கள் யாரிடம் சொல்லவர்கள், அதற்கு தான் மத்திய அரசில் ஒரு மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்க்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்குவது போல் மீனவர் சமுதாயத்துக்கும் சலுகைகள் வழங்க வேண்டும் என்றும், மீனவர்களுக்கு , ஓய்வூதியம், காப்பிட்டு, வழங்க வேண்டும், மீன் பிடிக்க உபயோகிக்கபடும் உபகரணங்கள் நவீன படுத்தப்பட்டதாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Fisherman The Farmer Of The Sea says Rahul Gandhi

ஒன்று இரண்டு பேர் தான் நாட்டின் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என மோடி நினைக்கிறார் என்றும், இப்போது இருக்கும் மத்திய பாஜக அரசு சிறு வியாபாரிகளை நசுக்குகிறார்கள் என்றும், பெரு வியாபாரிகளை வாழ வைக்கினறனர். எங்கள் காங்கிரஸின் கொள்கை சிறு நடுத்தர வியாபாரிகளை அதிகப்படுத்தினால் தான் நாட்டில் வளர்ச்சி ஏற்படும் என நம்புகிறோம் என்றும் கூறினார்.

உங்களின் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி தரமுடியவில்லை என வருந்துகிறீர்கள். ஆனால் பல கோடிகள் பெரு முதலாளிகளுக்கு கடனாக கொடுத்துள்ளது மத்திய அரசு என்று குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, ஏழை மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதே இந்த பிரச்சனைகளுக்கும் நீங்கள் முன்னேறி செல்வதற்கும் தீர்வு என்றார்.

நான் ஏன் இங்கு வந்துள்ளேன் என்றால் உங்கள் பிரச்சினைகளை கேட்க தான் என்றும், வேறு பெரிய தலைவர்கள் யார் வந்தாலும் அவர்கள் கருத்தை மட்டுமே தெரிவிப்பார்கள். நீங்கள் சொல்வதை கேட்கவே நான் வந்துள்ளேன் என்றும் ராகுல்காந்தி கூறினார். நான் அடுத்த முறை வரும் போது என்னை படகில் உங்களுடன் கடலுக்கு அழைத்து செல்லுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

தூண்டில் வளைவு எப்படிம்மா இருக்கும்...மீனவ பெண்ணிடம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஷாக் கேள்வி தூண்டில் வளைவு எப்படிம்மா இருக்கும்...மீனவ பெண்ணிடம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஷாக் கேள்வி

தொடர்ந்து மீனவ பெண்கள் ராகுல் காந்தியிடம் பல்வேறு புகார் மனுக்களை கொடுத்தனர். அதில் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என ராகுல் காந்தியிடம் மீனவர்கள் கடிதம் அளித்தனர். அவர் அதை படித்து விட்டு பதில் அளிப்பதாக தெரிவித்தார் ராகுல்காந்தி.

தொடர்ந்து பேசிய பெண்கள், கொரோனாவிற்கு பின்னர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அப்போது ஒரு சில மீனவ பெண்கள் நிவர் புயலின் போது முதல்வர் நாராயணசாமி மீனவர்களை சந்திக்கவில்லை எனவும் ராகுல் காந்தியிடம் புகார் தெரிவித்தனர்.

English summary
Congress leader Rahul Gandhi termed fishermen as the 'farmers of the sea' while addressing a gathering in Puducherry on Wednesday and claimed that they did not have representation at the Centre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X