புதுவையில் வழிபாட்டு தலங்களில் கூடுதல் தளர்வுகள்.... ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு
புதுச்சேரி: கோயில் திருவிழாக்கள் மற்றும் ரமலான் நோன்பைக் கருத்தில் கொண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இரவு 10 மணி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்கள் செயல்படப் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை அனுமதியளித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த புதுவை அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

அதில் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களும் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அனைத்து சமய நிர்வாகிகளுடன் ஆளுநர் மாளிகையில் தமிழிசை செளந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது புதுச்சேரியில் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்களில் இரவு திருவிழாக்கள் நடைபெறவுள்ளது என்பதால் அதற்கும் அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. மேலும், இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கப்படும் ரமலான் நோன்பு வரும் 14ஆம் தேதி தொடங்கவுள்ளதால் இரவு நடத்தப்படும் தொழுகைக்கும் அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்,அனைத்து சமய தலைவர்கள், மதகுருமார்களின் வேண்டுகோளின்படி அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 10 மணி வரை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications