ஓட்டுப் போட காசு வாங்க மாட்டோம்.. உறுதிமொழி எடுத்த நரிக்குறவர்கள்.. சபாஷ்!
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது ஓட்டு போட காசு வாங்க மாட்டோம் என்று நூற்றுக்கணக்கான நரிக்குறவர்கள் கூடி உறுதிமொழி எடுத்தது அனைவரையும் அசரடித்தது.

புதுச்சேரியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் பெற கூடாது, அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி தேர்தல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மக்களிடையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்று வாக்களர்கள் வாக்களித்தவுடன் தெரிந்து கொள்ளும் வகையில் விவிபாட் என்ற இயந்திரங்களை இந்த ஆண்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த விவிபேட் இயந்திரத்தின் நம்பகத்தன்மை மற்றும் பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரி முழுவதும் விவிபாட் இயந்திரம் வாகனத்தில் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கருவடிக்குப்பம் விமான நிலையத்திற்கு பின்புறம் வசிக்கும் நரிக்குறவ இன மக்களிடையே விவிபேட் இயந்திரத்தின் பயன்பாடு குறித்து, தேர்தல் துறை அதிகாரிகள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற நரிக்குறவர்கள் விவிபாட் மாதிரி ஓட்டுகளை பதிவு செய்து பார்த்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன ஓட்டுக்கு பணம் பெற மாட்டோம் என உறுதிமொழியும் ஏற்றனர்.

-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications