நாராயணசாமியை எதிர்த்து போட்டி... நமச்சிவாயம் ஆவேச பேட்டி
புதுச்சேரி : முதலமைச்சர் நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் தானும் போட்டியிட தயார் என காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் சவால் விடுத்துள்ளார்.
Recommended Video
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி டில்லியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் இன்று புதுச்சேரி வந்தடைந்தார். அவருக்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் மாநில எல்லையில் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகத்திற்கு வந்த நமச்சிவாயத்தை நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.

முன்னதாக கட்சி அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளிடையே பேசிய நமச்சிவாயம், மத்திய அரசை குறை கூறி முதலமைச்சர் நாராயணசாமி மக்களை ஏமாற்றுவதே வேலையாக வைத்திருப்பதாகவும், 85% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன் என கூறும் முதலமைச்சர் நாராயணசாமி எந்தெந்த திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன் என தெரிவிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.
மேலும் துணைநிலை ஆளுநர் மீது உள்ள சொந்த ஈகோவின் காரணமாக புதுச்சேரியை போராட்ட களமாக்கி உள்ளதாவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர் புதுச்சேரி தமிழகத்தோடு இணைக்கப்படும் என்ற முதலமைச்சரின் பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை என்றார்.
முதலமைச்சர் நாராயணசாமி எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ அதே தொகுதியில் தானும் போட்டியிட தயார் என்றும் சவால் விடுத்தார். மேலும் என்னை ஏமாற்றிய முதலமைச்சர், தற்போது மக்களையும், இவருடன் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களையும் ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டினார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications