குமட்டும் ஆபாசம்.. மெசேஜ்ஜுடன் வந்த 'போட்டோ'.. உற்றுப்பார்த்து உறைந்த இளைஞர்.. போலீசுக்கு ஒரே ஓட்டம்
இளம்பெண்களை அனுப்பி வைப்பதாக கூறி பண மோசடி செய்த இளைஞரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்
புதுச்சேரி: புதுச்சேரியில் இளம் பெண்களை குறிப்பிட்ட ரேட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி டெலிகிராமில் மோசடி செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இன்டர்நெட் பயன்பாடுகள் அதிகரிக்க அதிகரிக்க அதில் ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், புதுச்சேரியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 25 வயது இளைஞர் ஒருவருக்கு அடையாளம் தெரியாத டெலிகிராம் குரூப்பில் இருந்து ஒரு புகைப்படம் வந்திருக்கிறது. அத்துடன் 'இந்த பெண் வேண்டும் என்றால் ரூ.4,500 அனுப்பி வையுங்கள். 6 மணி நேரத்திற்கு என்ஜாய் செய்யுங்கள்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இளைஞர் போட்டோவை டவுன்லோடு செய்து பார்த்தபோது ஷாக்காகி இருக்கிறார். அது அவரது உடன் பிறந்த தங்கை. எனவே உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய புதுச்சேரி க்ரைம் போலீசார், மெசேஜ் எங்கிருந்து வந்தது என்று ஆய்வு செய்தனர். புதுச்சேரி காலேஜ் கேர்ள்ஸ் எனும் குரூப்பில் இருந்து இந்த மெசேஜ் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் , இதே போன்று 5 குரூப்கள் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

குரூப் அட்மின்
இதனையடுத்து இந்த குரூப்களுக்கு யார் அட்மின் என்று காவல்துறையினர் தேட தொடங்கினர். தேடுதலில் புதுச்சேரியை சேர்ந்த அரவிந்தன் எனும் 25 வயது இளைஞன்தான் இதற்கு அட்மின் என்று தெரியவந்தது. இதையடுத்து அரவிந்த் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, அரவிந்தன் சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வந்திருக்கிறார். இதன் மூலம் ஏராளமான நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இப்படியாக சமூக வலைத்தளங்களிலிருந்து இளம் பெண்களின் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். இந்த படங்களை கொண்டு முதலில் 'புதுச்சேரி காலேஜ் கேர்ள்ஸ்' எனும் குரூப்பை உருவாக்கியிருக்கிறார்.

ஆபாச ஆடியோ
இந்த குரூப்பில் ஏராளமான இளம் பெண்களின் படங்களை தொடக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பின்னர் சில நாட்கள் கழித்து ஆபாச ஆடியோக்களையும் பகிர்ந்திருக்கிறார். கடைசியாக ஒரு குறிப்பிட்ட இளம்பெண்ணின் படத்தை மட்டும் ஷேர் செய்து, 'இந்த பெண் வேண்டுமெனில் ரூ.2,000 பணம் கொடுத்து புக் செய்ய வேண்டும். 6 மணி நேரத்திற்கு உங்களுடன் இருப்பார்' என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனையடுத்து சிலர் பணம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் பணம் வந்த அடுத்த நிமிஷமே அந்த நபர் பிளாக் செய்யப்படுவார். இதேபோல ஏராளமான நபர்களுக்கு போட்டோ ஷேர் செய்து அனுப்பி பணம் கேட்டிருக்கிறார்.

மோசடி
இது போன்று மொத்தம் 5 குரூப்கள் இயங்கி வந்துள்ளன. 5 குரூப்களிலும் பல்லாயிரக்கணக்கில் சந்தாதாரர்கள் இருக்கின்றனர். இப்படி ஒவ்வொருவரிடமும் பணம் ஏமாற்றப்பட்டிருக்கிறது. இது டெலிகிராம் குரூப் என்பதால் போன் நம்பரோ, மெயில் ஐடியோ இருக்காது. அதேபோல பணம் செலுத்தும் அகவுண்டும் யாருடையது என்பதை கண்டுபிடிக்க முடியாது. பணத்தை இழந்தவர்களும் காவல் நிலையம் சென்று புகார் அளிக்க தயங்குவார்கள் என்பதால் இந்த குரூப் குறித்து பெரிய அளவில் தகவல்கள் வெளியில் வரவில்லை. கடைசியாக இளைஞர் ஒருவர் கொடுத்த புகாரில் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விசாரணை
இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்திருக்கிறோம். இதன் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கிறார்களா? இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் போன்ற தகவல்களை திரட்டி வருகிறோம். சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருப்பதால் பண மோசடியும் லட்சக்கணக்கில் நடந்திருக்கும் என்று நினைக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications