புதுச்சேரியில் உள்ளே வருதா தவெக? பாஜகவிற்கு ரங்கசாமி தந்த ட்விஸ்ட்.. மிரள வைக்கும் செக்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பாஜகவுக்கு ஒரு அமைச்சர் மற்றும் துணை சபாநாயகர் பதவி மட்டுமே வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி திட்டவட்டமாக கூறியிருக்கிறார். ஒருவேளை அமைச்சரவை ஒதுக்கீட்டில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தால் த.வெ.க. மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ரங்கசாமி கணக்குபோட்டு வருவதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி அரசியலை பொறுத்தவரை தமிழ்நாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. மத்திய அரசின் உதவியுடன் தான் ஆள முடியும். நிதியுதவி உள்பட பல்வேறு விஷயங்களுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசு தான் உதவி செய்கிறது. காங்கிரஸ் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆண்டதற்கு இதுவே காரணம், இப்போது பாஜக கூட்டணி அரசு ஆள்வதற்கும் இதுவே காரணம்.

புதுச்சேரியில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பா.ஜனதா 4 தொகுதிகளிலும், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி தலா 1 தொகுதிகளில் என மொத்தம் 18 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றன. முதல்வராக ரங்கசாமி 5-வது முறை பதவியேற்க உள்ளார்.
இந்தநிலையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைப்பது, அமைச்சர்கள் ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது. இதற்காக பாஜக புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியா, மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜனதா 6 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. எனவே முதல்-அமைச்சர் உள்பட 4 அமைச்சர்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும், சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்கள் பா.ஜனதாவுக்கும் வழங்கப்பட்டிருந்தது
ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜனதா 4 தொகுதிகளிலும், கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி தலா 1 தொகுதிகளிலும், நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்ற சுயேச்சை விக்னேஸ்வரனையும் சேர்த்து தங்களுக்கு 7 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக பாஜக கூறியிருக்கிறது.
இதனால் கடந்த அமைச்சரவை போல தற்போதும் சபாநாயகர், 2 அமைச்சர்கள் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று பா.ஜனதா கேட்கிறது. நெடுங்காடு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேச்சையை தற்போது பா.ஜனதாவில் இணைந்துள்ளார். அவரை கணக்கு கட்டுவதால் ரங்கசாமி மிகுந்த கோபம் அடைந்துள்ளாராம்.
.
தற்போது பா.ஜனதாவில் 4 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் ஒரு அமைச்சர் மற்றும் துணை சபாநாயகர் பதவி மட்டுமே வழங்க முடியும் என்று திட்டவட்டமாக ரங்கசாமி கூறி விட்டாராம். அமைச்சரவை ஒதுக்கீட்டில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தால் த.வெ.க. மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க கணக்குபோட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் முதல்வர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த பா.ஜனதா மேலிட தலைவர்கள் நேரம் ஒதுக்கி கேட்டபோது, அவர் 'நான் உங்களை அழைக்கிறேன்' என்று கூறியிருக்கிறாராம். இதனால் அதிர்ச்சியடைந்த பா.ஜனதா மேலிட தலைவர்கள், இது தொடர்பாக டெல்லி தலைமைக்கு தகவல் தந்துள்ளார்கள். தவெக உடன் செல்ல வாய்ப்பு இல்லை என்றாலும், தவெகவை காட்டி ரங்கசாமியும் அங்கு பேரம் பேசுவது பாஜகவிற்கு தலைவலியாகி உள்ளதாம்.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி!












Click it and Unblock the Notifications