புதுச்சேரி சாலையில் கிடந்த பை.. திறந்து பார்த்தால் கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகள்! மொத்தம் 49 லட்சம்

சாலையில் கேட்பாரற்று கிடந்த பையில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அண்ணா சாலை சாலையில் கிடந்த பையில் கட்டுக்கட்டாக பணத்தை போலீசார் கைப்பற்றினர். இந்த பணம் யாருடையது என்பதைக் கண்டறியும் முயற்சியில் இப்போது போலீசார் இறங்கியுள்ளனர்.

புதுச்சேரியில் அண்ணாசாலையில் கேட்பாரற்று பை ஒன்று இருந்துள்ளது. செட்டிவீதி சந்திப்பில் அந்த பை நீண்ட நேரமாகக் கீழே கிடந்துள்ளது. இதை அங்கிருந்த டீக்கடை மாஸ்கர் பெரியசாமி கவனித்துள்ளார்.

நீண்ட நேரமாக அந்த பை அங்கேயே இருந்துள்ளது. இதையடுத்து டீ மாஸ்ட்ர் பெரியசாமி, அருகே இருந்த ஆட்டோ ஓட்டுநரை அழைத்து பையைத் திறந்து பார்த்துள்ளார். உள்ளே இருந்ததைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.

கட்டுக்கட்டாக பணம்

கட்டுக்கட்டாக பணம்

ஏனென்றால் அந்த பைக்கு உள்ளே கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது. கேட்பாரற்று கிடந்த பையில் இப்படிக் கட்டுக்கட்டாக பணம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், இது குறித்து உடனடியாக பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவ் கிடைத்ததும் சம்பவ இடத்தற்கு விரைந்த வந்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தினர். டீ மாஸ்டரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

ரூ. 49 லட்சம்

ரூ. 49 லட்சம்

உள்ளே கட்டுக்கட்டாக பணம் இருந்த நிலையில், அதை எண்ணும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்த நிலையில், எண்ண எண்ணப் பணம் வந்து கொண்டே இருந்தது. இதனால் பணத்தை எண்ணும் பணிகள் நிறைவடையவே சில மணி நேரம் ஆனது. இதில் ஒட்டுமொத்தமாக ரூ.49 லட்சம் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து இந்த பணத்தை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர்.

விசாரணை

விசாரணை

ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற போலீசாரிடம் இந்தப் பணத்தை தெற்கு பிரிவு சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பணம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பணத்தைச் சாலையில் விட்டுச் சென்றது யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கினர். முதற்கட்டமாக போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் சோதனை செய்தனர்.

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வந்துள்ளார். அவரது பக்கவாட்டில் மாட்டியிருந்த பை தான் கீழே விழுந்துள்ளது. நீண்ட நேரம் அந்த பை கீழே கிடந்த நிலையில், அதன் பின்னர் டீ மாஸ்டர் பெரியசாமியும், ஆட்டோ ஓட்டுநரும் திறந்து பார்க்கிறார்கள். இவை அனைத்தும் அந்த சிசிடிவி காட்சிகளில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக போலீசார் சேகரித்தனர்.

பணத்தைத் தவறவிட்டது யார்

பணத்தைத் தவறவிட்டது யார்

அடுத்தகட்டமாக டூ வீலரில் சென்ற நபர் யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கினர். அங்குள்ள வெங்கட்டா நகரை சேர்ந்த சங்கர் என்பவர் தான் பணத்தைத் தவறவிட்டுள்ளது தெரிய வந்தது. வங்கியில் பணத்தைச் செலுத்தச் சென்ற போதுதான் அவர் பணத்தைத் தவறவிட்டுள்ளார். இதையடுத்து உரிய ஆவணங்களை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நாளை திங்கள்கிழமை சமர்ப்பிக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். சாலையில் கேட்பாரற்று கிடந்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+