புதுச்சேரியின் பல இடங்களில் இரவு முழுக்க மின் தடை.. மக்கள் போராட்டம்.. போக்குவரத்து பாதிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புதுச்சேரியிலிருந்து விழுப்புரம், கடலூர் செல்லும் சாலையில் இரவு நேரத்தில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, போக்குவரத்தும் தடைபட்டது.
Recommended Video
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் உள்ள மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் புரேவி புயல் காரணமாக கடந்த 2 தினங்களாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அந்த வகையில் திருபுவனை தொகுதிக்குட்பட்ட இந்திராநகர், புது நகர், மாரியம்மன் கோவில் வீதி உள்பட பல்வேறு பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு நேற்று பிற்பகலில் இருந்து இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி முழுவதும் இருளால் சூழப்பட்டது. நீண்ட நேரமாகியும் மின் தடை சரிசெய்யப்படாததை கண்டித்து அப்பகுதி மக்கள் திடீரென திருபுவனையில் புதுச்சேரி விழுப்புரம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதே போல் முதலியார்பேட்டை பகுதியிலும் மின் தடை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மின் இணைப்பை உடனடியாக வழங்க கௌரி புதுச்சேரி கடலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
-
விழுப்புரத்தில்.. ' நான் இருக்கிறேன் கவலைப்படாதீங்க'.. நம்பிக்கை ஊட்டிய அமைச்சர் வன்னி அரசு -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்!












Click it and Unblock the Notifications