திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக
புதுச்சேரி: புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக இருக்கிறார். அவரது மருமகன் நமச்சிவாயம் தலைமையில் உள்ள பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. புதுச்சேரியில் கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை.. மாறாக புதிய கட்சியான மார்டின் சார்லஸின் லட்சிய ஜனநாயக கட்சியை சேர்க்க பாஜக விரும்பும் நிலையில், ரங்கசாமி சேர்க்க வேண்டாம் என்று கூறுவது தான் சிக்கல். சார்லஸ் மார்டின் யார் என்றால் ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. தற்போது பேச்சுவார்த்தைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு திருச்செந்தூர் சென்றுள்ளார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. இதனால் பாஜக பரிதவிக்கிறது.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்துவிட்டது. ஆனால் சார்லஸ் மார்டினால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. என்.ஆர்.காங்கிரசிற்கு 16 இடங்களும், பா.ஜனதா கூட்டணிக்கு 14 இடங்களும் ஒதுக்கப்பட்டுவிட்டது. பிரச்சனை இடம் ஒதுக்குவதிலோ அல்லது எந்ததொகுதிகள் என்பதோ அங்கு சிக்கலே இல்லை.. ஆனால் முதல்வர் ரங்கசாமி புதிய கட்சிகளை இணைக்கக்கூடாது மற்றும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என நிபந்தனைகளை விதித்துள்ளார்.

சார்லஸ் மார்டின் கட்சி
குறிப்பாக, சார்லஸ் மார்டினின் லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்ப்பதற்கு ரங்கசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏனெனில் அவர்கள் சேர்ந்து கொண்டு பின்னாளில் சிக்கல் வருமோ என்ற அச்சம் ரங்கசாமிக்கு இருக்கிறது.. இந்த சிக்கலை தீர்க்க, புதுச்சேரி பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளரான மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா மற்றும் மாநில பாஜக தலைவர்கள் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் தேசிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். லட்சிய ஜனநாயக கட்சியால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், அதனை பாஜக நேரடியாக கையாளுமென்றும் ரங்கசாமியை சமாதானப்படுத்த பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
மீண்டும் பேச்சுவார்த்தை
இதைத் தொடர்ந்து நேற்று காலை தனி விமானத்தில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் டெல்லியில் இருந்து புதுச்சேரி திரும்பினர். கட்சி மேலிடம் அறிவுறுத்தல்படி அவர்கள் முதல்வர் ரங்கசாமியை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருந்தார்கள்.
அப்பா பைத்தியம் சாமி கோவில்
இதற்காக நேற்று மதியம் 12.30 மணியளவில் முதல்வர் ரங்கசாமியின் இல்லத்துக்கு வர உள்ளதாக தகவல் தெரிவித்தனர். வழக்கமாக அரசியலில் முக்கிய முடிவுகளை ரங்கசாமி எடுக்கும்போது சேலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி கோவிலில்தான் முடிவு எடுப்பார். அதன்படி அமாவாசை தினமான நேற்று முன்தினம் அந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு நள்ளிரவு வீடு திரும்பினார்.
கோரிமேட்டில் உற்சாகம்
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நேற்று காலை 9 மணி வரை கோரிமேட்டில் உள்ள தனது வீட்டின் அருகில் உள்ள மைதானத்தில் ரங்கசாமி உற்சாகமாக டென்னிஸ் விளையாடினார். பின்னர் என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை தனது இல்லத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.
திருச்செந்தூர் சென்றார்
ஆனால் மத்திய அமைச்சர் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகளுடனான சந்திப்பை தவிர்க்கும் வகையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று காலை 11.30 மணியளவில் திடீரென காரில் புறப்பட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றார். அங்கிருந்து திருச்செந்தூர் சென்று முருகனையும் தரிசிக்க போய்விட்டார். இதனால் பாஜகவினர் பரிதவித்து வருகிறார்கள்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!














Click it and Unblock the Notifications