புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம்.. போராட்டத்தை அறிவித்த திமுக
புதுச்சேரி: புதுச்சேரியில் 2026 -2027 ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மும்மொழிக் கொள்கை காரணமாக அரசு அலுவல் மொழியான பிரெஞ்சு நீக்கப்பட்டு புதுச்சேரி பள்ளியில் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக போராட்டத்தை அறிவித்துள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு தனி கல்வி வாரியம் கிடையாது. இதனால், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் தமிழ்நாடு பாடத் திட்டமும், மாகே பிராந்தியத்தில் கேரள பாடத் திட்டமும், ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திர பாடத் திட்டமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் தமிழ்நாடு அரசின் மெட்ரிக் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

1 முதல் 5 ஆம் வகுப்பு
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. கடந்த 2024 - 2025 ஆம் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டு முழுமையாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலுக்கு வந்தது.
இருமொழிக் கொள்கை
புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளிலும் படிப்படியாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் போலவே புதுச்சேரியிலும் இருமொழிக் கொள்கையே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அரசுப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலமும், தனியார் பள்ளிகளில் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் இவற்றில் ஏதாவது 2 மொழிகளை மாணவர்கள் படித்து வந்தனர்.
மும்மொழி கட்டாயம்
இந்நிலையில், மத்திய கல்வி வாரியம் - சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, நடப்பு கல்வி ஆண்டு (2026-27) முதல் 6 ஆம் வகுப்பில் இருந்து ஆங்கிலம், இந்தி, தமிழ் என மும்மொழிகளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரியில் பிரெஞ்சு பாடம் நீக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுவை மாநில எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டு முதல், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கும் புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மும்மொழி பாடத்திட்டத்தின் திணிப்பினால், ஒரு வெளிநாட்டு மொழி, இரு பிராந்திய மொழிகள் படிக்கலாம் என்று சொல்லி, ஆங்கிலத்தை மட்டும் வைத்துக்கொண்டு, பிரெஞ்சு பாடம் நீக்கப்பட்டுள்ளது.
அடையாளம் சிதைக்கப்படும்
இது மாணவர்களின் கல்விச் சுமையை அதிகரிப்பதோடு, அவர்களின் இயல்பான கற்றல் முறையையும் பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது. 7 நாட்களில் இதை அமல்படுத்த கூறியிருப்பது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மிகுந்த கண்டனத்திற்குரியது.
இந்த அறிவிப்பு புதுவை மண்ணின் தனித்துவமான பிரெஞ்சு கலாச்சார அடையாளத்தையும், அதன் நீண்டகால மொழி வரலாற்றையும் சிதைக்கும் வஞ்சகச் செயலாகும். பிரெஞ்சு மொழியைத் தங்கள் வாழ்வியலின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ள புதுச்சேரி பூர்வகுடி மக்களின் உரிமையை இது நேரடியாகப் பறிக்கிறது.
மேலும், பல ஆண்டுகளாக பிரெஞ்சு மொழி பயிற்றுவித்து வரும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் வேலைவாய்ப்பையும் இந்தத் தன்னிச்சையான முடிவு கேள்விக்குறியாக்கியுள்ளது. மக்களின் விருப்பத்தைக் கேட்காமல் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தன்னிச்சையான முடிவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
பன்முகத்தன்மையைச் சிதைக்கும் இத்தகைய எதேச்சதிகார மொழித் திணிப்பு நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். புதுவை மாநில திமுக சார்பில் கல்வி துறையை கண்டித்து மிகப்பெரிய மொழி உரிமை போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications