Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படுக்கையறையில் "விருந்தாளி".. புதுச்சேரி பீச் ரிசார்ட்டில் விபச்சாரத்தில் சிக்கிய பிரபலம்.. அசிங்கம்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட நபர் இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்தானே?

புதுச்சேரி உப்பளம் சாலையில் உள்ளது அந்த புகழ்பெற்ற ரிசார்ட்.. சுற்றுலா பகுதி என்பதால், புதுச்சேரி வருபவர்கள், ஏராளமானோர் இந்த ரிசார்ட்டில் தங்குவார்கள்..

Puducherry Prostitution and Who is this Ayyappan why did police take action against Beach Resort Manager

விபச்சாரம்: இந்நிலையில், இந்த ரிசார்ட்டில், கடந்த பிப்ரவரி 29ம் தேதி முதலியார்பேட்டை போலீசார் திடீரென்று சோதனை நடத்தினார்கள்.. அப்போது அங்கு விபச்சாரம் நடந்து கொண்டிருப்பதை கண்டு போலீசார் அதிர்ந்தனர்.. இது தொடர்பாக 2 பெண்களையும் போலீசார் மீட்டனர். இவர்கள் 2 பேருமே வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, விபச்சாரத்தை நடத்தியது யார்? வெளிமாநிலத்திலிருந்து இந்த பெண்களை, புதுச்சேரிக்கு அழைத்து வந்தது யார்? என்ற விசாரணையில் போலீசார் களமிறங்கினார்கள்.. அப்போதுதான் சண்முகாபுரம் பாலாஜி சிக்கினார்.. இவருக்கு 35 வயதாகிறது..

ரிசார்ட்கள்: வில்லியனூர் ஆரியபாளையம் அய்யப்பன் (எ) மணிகண்டனின் உதவியுடன் ஆன்லைன் மூலமாக, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் போட்டோக்களை சேகரித்து கொள்வாராம் பாலாஜி.. இந்த போட்டோக்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைத்து, லாட்ஜ், ரிசார்ட்டுகளுக்கும் பெண்களை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவாராம்..

இவர்களுக்கு ரெகுலர் கஸ்டமர்களாக உப்பளம் அவ்வை நகர் தினேஷ் (38), ரெட்டியார்பாளையம் சதாசாய் நகர் லோகேஷ் (25) இருவரும் இருந்துவந்திருக்கிறார்கள்.. இப்போது இவர்கள் 2 பேருடன், பாலாஜி, மணிகண்டன், ரிசார்ட் மேனேஜர் கோட்டக்குப்பம் சின்னமுதலியார் சாவடி முத்தமிழன் என மொத்தம் 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

விபச்சார தொழில்: ஆனால், இந்த விபச்சார தொழிலில் மூளையாக செயல்பட்டவர் அய்யப்பன் என்ற மணிகண்டன்தான்.. இவர் புதுச்சேரியின் பிரபல ரவுடி ஆவார்.. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை, பாலாஜி சப்ளை செய்து வந்ததும், இந்த அய்யப்பனுக்குதான்..

அழகிகளை விலைக்கு வாங்கி விபச்சார தொழில் நடத்தியே, லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்திருக்கிறாராம் ரவுடி அய்யப்பன்.. இதே குற்றச்சாட்டில் பலமுறை அய்யப்பனின் பெயர் போலீசில் அடிபட்டுள்ளது.. அதனால், அவரை வலைவீசி தேடிவந்த நிலையில், தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார் அய்யப்பன்.

புதுவை போலீஸ்: இந்நிலையில் அய்யப்பன், கோவாவில் பதுங்கி இருப்பதாக புதுவை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குற்றப்புலனாய்வுக் குழுவினர் உடனடியாக கோவாவுக்கு விரைந்தனர்.. அங்கு தலைமறைவாக இருந்த அய்யப்பனை சுற்றி வளைத்து கைது செய்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதுச்சேரிக்கும் அழைத்து அழைத்து வந்து விசாரித்தனர்.

இதையடுத்து, போலீசாரிடம் அய்யப்பன் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார். அதில், காஸ்ட்லி வாழ்க்கை வாழ வேண்டும் என்பது அய்யப்பனின் நீண்ட கால ஆசையாம்.. இதற்காகவே, விபச்சாரத்தில் ஈடுபட்டதுடன், விபச்சார விடுதியையும், தன்னுடைய நண்பர்களை வைத்து நடத்தியிருக்கிறார் அய்யப்பன்.. சம்பந்தப்பட்ட அழகிகளுடன் அய்யப்பனும் சேர்ந்தே உல்லாசத்தில் ஈடுபடுவாராம்.

வாக்குமூலம்:
பின்னர், அய்யப்பனிடமிருந்து 2 செல்போன்கள், சொகுசு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்ததுடன், காலாப்பட்டு ஜெயிலிலும் அடைத்திருக்கிறார்கள்.. அய்யப்பன் மீது ஏற்கனவே கொலை, வெடிபொருள், கொள்ளை உள்ளிட்ட 16 கேஸ்கள் நிலுவையில் இருக்கிறதாம்.. யார் கண்ணிலும் சிக்காமல் தப்பித்துவந்த நிலையில், அய்யப்பனை மொத்தமாக தூக்கிவிட்டது புதுச்சேரி போலீஸ்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+