1000 ரூபாய்.. "தீபாவளி" சர்ப்ரைஸ் தந்த முதல்வர்.. இனி இலவச வேட்டி சேலை கிடையாதாமே.. அசத்தும் ரங்கசாமி
புதுச்சேரி: புதுச்சேரி ரங்கசாமி சர்ப்ரைஸ் ஒன்றை தந்துள்ளார்.. இது புதுச்சேரி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பொறுத்தவரை எதையும் பக்காவாக பிளான் செய்து கொண்டுதான் களத்தில் குதிப்பார்.. எனினும் நிகழ்கால "கூட்டணி" அரசியலில், சற்று தள்ளாடுவதாக கூறப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை வரவேற்பது முதல் பாஜகவுக்கான ஆதரவை அபரிமிதமாகவே வழங்கி வருகிறார் ரங்கசாமி. புதுச்சேரியில் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வலுவாகவே உள்ளதாக முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் அடிக்கடி தெரிவித்து வந்தாலும், சில மனவருத்தங்கள், ரங்கசாமிக்கு கூட்டணியுடன் இருக்கத்தான் செய்கின்றன என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
கூட்டணி: பாஜக கூட்டணி ஆட்சியில் முதல்வராக இருக்கும் ரங்கசாமி, ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே "மாநில அந்தஸ்து" இல்லாததால் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறாராம்.. இதைத்தவிர, மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள், மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக இருப்பதாகவும் தன்னுடைய ஆதரவாளர்களிடம் புலம்பியும் வருகிறாராம்.
சுருக்கமாக சொல்லப்போனால், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னரே, புதுவையின் விவகாரங்களில் தலையிடுவதாகவும், கோப்புகளிலும்கூட, அவரே அனைத்து முடிவுகளையும் எடுப்பதால், இது ரங்கசாமிக்கு எரிச்சலை தந்துவருவதாகவும் செய்திகள் அவ்வப்போது கசிந்தபடியே உள்ளன.. போதாக்குறைக்கு சந்திர பிரியங்காவை தகுதி நீக்கம் செய்யும் விவகாரமும் சேர்ந்துகொண்டதால், புதுச்சேரி அரசியலே அனலடித்து வருகிறது.
நாராயணசாமி: அதனால்தான், "ஆள்வதற்கு தகுதியில்லாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டு வெளியே போகட்டுமே" என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் சீறிக்கொண்டிருக்கிறார்..
இப்படிப்பட்ட சூழலில், புதுச்சேரியில் ஆதி திராவிட, பழங்குடியின மக்களுக்கான நிதியுதவி ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்து, அம்மாநில மக்களுக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளார்.
சர்ப்ரைஸ்: புதுச்சேரி மாநிலம், பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலையாகி, இந்தியாவுடன் இணைந்த நவம்பர் 1-ம் தேதி அம்மாநிலத்தில் விடுதலை நாள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி, கலந்து கொண்டு பேசினார்.
அப்போது "புதுச்சேரியில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள சிரமத்தைப் போக்கும் வகையில் "CanKids" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியிலிருந்து பரிந்துரைக்கப்படும் குழந்தைகள், நாடு முழுவதும் உள்ள மற்ற மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான சிறந்த சிகிச்சையினைப் பெற முடியும்.

வங்கிக்கணக்கில்: தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களின்போது, 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வேட்டி சேலைக்குப் பதிலாக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.500, வரும் தீபாவளி முதல் ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டு அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்" என்று அறிவித்திருக்கிறார்.
ஆக, விரைவில் தேர்தல் வரும் சூழலில், ரங்கசாமியின் இந்த அறிவிப்பானது, மிகுந்த பலனை ஆளும்கட்சிக்கு ஏற்படுத்தி வரும் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications