அச்சச்சோ... ராகுல் நாளை புதுச்சேரிக்கு வருகை... கலைக்கப்படும் நிலையில் காங்கிரஸ் ஆட்சி!
புதுச்சேரி: தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி நாளை புதுச்சேரி வரும் நிலையில் அங்கு எந்த நேரத்திலும் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்படலாம் என்கிற நிலை உருவாகி இருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் தேதி 2 வாரங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தேர்தல் பிரசாரம் களை கட்டி இருக்கிறது.

புதுவை காங். ஆட்சி கலைப்பு?
முதல்வர் நாராயணசாமி ஆட்சி காலம் முடிவடையும் நிலையில் புதிய திருப்பமாக அடுத்தடுத்து இதுவரை 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பெரும்பான்மையை இழந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கலைக்கப்படலாம் என்கிற நிலை உள்ளது.

பாஜகவுக்கு தாவும் காங். எம்.எல்.ஏ.க்கள்
ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 2 பேர் ஏற்கனவே பாஜகவில் ஐக்கியமாகிவிட்டனர். தற்போது ராஜினாமா செய்துள்ள மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் ஜான்குமாரும் பாஜக பக்கம் தாவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ராகுல் நாளை புதுவை வருகை
இந்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். புதுச்சேரியில் மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ராகுல் காந்தி நாளை சந்தித்து பேச இருக்கிறார்.

காங். நிர்வாகிகள் அதிர்ச்சி
புதுச்சேரிக்கு ராகுல் காந்தி வரும் நிலையில் அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு கலைக்கப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இது காங்கிரஸ் கட்சியினரை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications