பாஜகவுடன் ஒற்றுமையா இருக்கோம்.. புதுச்சேரிக்கு அமித்ஷாவிடம் மாநில அந்தஸ்து கேட்டேன் - ரங்கசாமி
புதுச்சேரி: பாஜகவுடனான தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.
Recommended Video
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை மூலம் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சிசிடிவி மூலம் கண்காணிக்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் துவக்கி வைத்தார். முதல் கட்டமாக புதுச்சேரியில் உள்ள 27 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலமாக சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, நாளை முதல் புதுச்சேரி பழைய துறைமுக பகுதியில் மூன்று நாட்களுக்கு சுகாதார திருவிழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்க உள்ளனர். அதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்." என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் என்ன கோரிக்கை வைத்தீர்கள் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை புதுச்சேரிக்கு வந்த அமீத்ஷாவிடம் வலியுறுத்தினேன்.
மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதியை கொடுத்து உதவவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். மேலும் தற்போது புதுச்சேரியில் கொரோனா பூஜ்யம் என்ற நிலையில் உள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள அரசு முழு வீச்சில் தயாராக உள்ளது.
மத்திய அரசின் உதவியுடன் அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம் என்றும். பிரதமர் மோடி அறிவித்தபடி புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும், புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை. என்றார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications