கராத்தேவில் மெர்சல்.. ஒரே நேரத்தில் சகோதர சகோதரியாக பிறந்த இரட்டையர்கள்.. கஸ்தூரி அளித்த விருது
காரைக்கால்: ஒரே நேரத்தில் சகோதர சகோதரியாக பிறந்த இரட்டையர்கள் தற்காப்பு கலையில் வியத்தகு சாதனை படைத்து வருகின்றனர்.அந்த குழந்தைகளுக்கு திரைப்பட நடிகை கஸ்தூரி சாதனை குழந்தைகள் விருது வழங்கி கௌரவித்தார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டமியை மகாகுரு வி.ஆர்.எஸ் குமார் என்பவர் நடத்தி வருகிறார். இவரிடம் இரட்டையர்களான கே.ஸ்ரீ விசாகன் வயது 9 மற்றும் கே. ஸ்ரீஹரிணி வயது 9 ஆகியோர் மூன்று வயது முதல் கராத்தே, சிலம்பம், யோகா, கிக் பாக்ஸிங், குபுடோ தேக்வாண்டோ போன்ற தற்காப்பு கலை பயின்றார்கள்.

இந்த இரட்டை சகோதர சகோதரிகள் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கியிருக்கிறார்கள். இதற்காக புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோரிடம் அந்த குழந்தைகள் பாராட்டை பெற்றுள்ளனர். இதேபோல் தங்களது வியத்தகு சாதனைகளால் பல்வேறு தரப்பினரிடமும் இந்த குழந்தைகள் பாராட்டு பெற்றுள்ளனர்.
இந்த இரட்டை குழந்தைகள் கே.ஸ்ரீ விசாகன் மற்றும் கே. ஸ்ரீஹரிணி காரைக்கால் குட்ஷெப்பட் மேல்நிலை பள்ளியில் 5ம் வகுப்பு பயின்று வருகிறார்கள். இவர்கள் உலகிலேயே முதன்முதலாக ஒரே நேரத்தில் சகோதர சகோதரியாக பிறந்த இரட்டையர்கள் ஆவார்.

6 வயது முதல் 9 வயது வரை கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக பதக்கங்களை வாங்கி உலக சாதனை படைத்தனர் இவர்களை சிறப்பிக்கும் விதமாக பட்டுக்கோட்டையில் நடந்த வசந்த் டிவியின் தீபாவளி சிறப்பு பட்டிமன்றத்தில் திரைப்பட நடிகை கஸ்தூரி சாதனை குழந்தைகள் விருது வழங்கி கௌரவித்தார்.












Click it and Unblock the Notifications