கீரை பறிக்க சென்ற இடத்தில் பரிதாபம்... இரண்டு பெண்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் கீரை பறிக்க சென்ற இரண்டு பெண்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அடுத்துள்ள திருபுவனை கிராமத்தை சேர்ந்த செங்கேணி(60) மற்றும் விஜயா(55) ஆகிய இருவரும் திருபுவனை பகுதியில் உள்ள தோப்பில் கீரை பறிக்க சென்றுள்ளனர். நேற்று இரவு அடித்த சூறை காற்றால் அப்பகுதியில் மின்சார கம்பி அறுந்து கீழே விழே விழுந்துள்ளது.

மின்சார கம்பி அறுந்து கீழே விழுந்திருப்பதை கவணிக்காத இருவரும் மின்சார கம்பி மீது கால் வைத்துள்ளார்கள். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருபுவனை போலீசாரும், மின்துறை ஊழியர்களும் உயிரிழந்த இருவரது உடலையும் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீரை பறிக்க சென்ற போது மின்சாரம் தாக்கி இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்பசலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே பலத்த காற்றுடன் மழை பெய்கிறது. இதனால், சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்வது, ஈரமான சுவர்களில் மின்சாரம் பாய்வது என உள்ளன. ஆகையால், கவனத்துடன் இருக்கும் படி காவல்துறையினர் கூறியுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications