புதுவை: தடையை உடைத்துக்கொண்டு பாய்ந்த தவெக தொண்டர்கள்! 5000க்கு பதில் 10,000 என குவிந்ததால் பதற்றம்
புதுச்சேரி: புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் இன்று விஜய் மக்கள் சந்திப்பு இயக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. விஜய் இக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு நடக்கும் கூட்டம் என்பதால், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. 5000 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று போலீசார் கூறியிருந்தனர். ஆனால், 10,000க்கும் அதிகமானோர் தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கரூரில் தவெக அனுமதி கேட்டு கொடுத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த எண்ணிக்கையை விட அதிக அளவில் தொண்டர்கள் குவிந்ததால் நேரில் ஏற்பட்டது. எனவே இந்த கூட்டத்தில் நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் தீவிரமான கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். அனுமதி கேட்ட நேரத்தில் விஜய் கூட்டத்திற்கு வர வேண்டும், வெறும் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி என்று கூறியிருந்தனர்.

இதற்காக QR code கொண்ட அடையாள அட்டை கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு அட்டைக்கு ஒருவர் மட்டுமே அனுமதி என்று காவல்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், அட்டைக்கு இரண்டு பேர் அனுமதி என்று தகவல்கள் பரவின. எனவே அதிக அளவில் தொண்டர்கள் குவிந்து தங்களை உள்ளே விட வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், ஒரு கட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் அனைவரையும் உள்ளே அனுமதித்தனர். தற்போது 10,000க்கும் அதிகமானோர் உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் நெரிசல் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
-
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
வரலாறு தெரியாம தப்பு தப்பா பேசாதீங்க.. மருத்துவ படிப்பு விவகாரம்.. உதயநிதிக்கு அருண்ராஜ் பதில் -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ! -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்! -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா? -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு












Click it and Unblock the Notifications