புதுவையில் ரூல்ஸை பாலோ பண்ணாத தொண்டர்கள்.. விஜய் கூட்டம் நடக்கும் இடத்தில் தவெகவினர் முண்டியடிப்பு
சென்னை: புதுவையில் விஜய்யின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த தவெக தொண்டர்கள் முண்டியடித்துக்கொண்டு செல்ல முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. கரூர் கூட்ட நெரிசலை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த சூழலிலும், கியூ ஆர் கோடு உடன் வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என தெளிவாக கூறிய பின்னரும் ரூல்சை மதிக்காமல் ஏராளமான தவெக தொண்டர்கள் அங்கு வந்து முண்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் சம்பவத்தை போல் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போலீசார் பல்வேறு பாதுகாப்புகளை போட்டுள்ளனர். 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் போலீசார் கட்டுப்பாடுகளை மீறி ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கரூர் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் விஜய் இதுவரை பொதுக்கூட்டம் எதுவும் நடத்தவில்லை.
சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து புதுவையில் பிரசாரம் மேற்கொள்ள விஜய் முடிவு செய்தார். புதுவையில் ரோடு ஷோ செல்ல அனுமதி கேட்கப்பட்ட நிலையில், அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பல முறை முயற்சி செய்தும் ரோடு ஷோ பிரசாரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இதையடுத்து தான் புதுவையில் பொதுக்கூட்டம் நடத்த புதுவை போலீசார் அனுமதி அளித்தனர். அதன்படி இன்று புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்கூட்டம் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு ஹெலிபேடு மைதானத்திற்கு வரும் விஜய், அவரது பிரசார வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேச உள்ளார்.
கரூர் கூட்டத்துக்கு பின்னர் முதல் முறையாக பொதுவெளியில் விஜய் பேசுகிறார். மேலும் கரூர் சம்பவத்தை போல் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டன. 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டு ஒரு கேபினுக்கு 500 பேர் வீதம் 10 கேபின்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
தவெக தொண்டர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும், கூட்ட நெரிசலை தவிர்க்க புதுவையில் உள்ளவர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கியூஆர் கோடு வசதியுடன் கூடிய பாஸ் வைத்த நிர்வாகிகளை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று புதுவை போலீசார் தெரிவித்தனர்.
தவெக தலைமையும் மரத்தில் ஏறக்கூடாது, கம்பிகளில் ஏறி குதிக்க கூடாது என தோண்டர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இதன்படி தொண்டர்கள் அத்துமீறாமல் இருக்க பாதுகாப்புக்காக ஆங்காங்கே இரும்பு தடுப்புகளும் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலையில் பெரிய அளவில் தொண்டர்கள் வருகை தராததால் ஒருவர் ஒருவராக கியூஆர் கோடை காண்பித்து உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் காலை 9.30 மணியளவில் தொண்டர்கள் கூட்டம் அதிகரித்தது. ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்ததால் உள்ளே செல்லும் இடத்தில் தொண்டர்கள் முண்டியடிக்க தொடங்கினர். கியூ ஆர் கோடு உடன் வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என தெளிவாக கூறிய பின்னரும் ரூல்சை மதிக்காமல் கியூ ஆர் கோடு இல்லாதவர்களும் அங்கு குவிந்ததோடு உள்ளே செல்வதற்காக முண்டியடித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பான சூழல் உண்டானது.
-
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க












Click it and Unblock the Notifications