புதுச்சேரி டூ விழுப்புரம்.. வைக்கோல் மூட்டையை திறந்து பார்த்தால்.. வாயை பிளந்த போலீஸ்.. பாருங்க
புதுச்சேரி: நாங்கள் எல்லாம் எவ்வளவு மூளைக்காரங்க.. எங்க கிட்டயேவா என்பது போல், புதுச்சேரி டூ தமிழ்நாட்டுக்கு வைக்கோல் போரில் மறைத்து வைத்து பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டதை விழுப்புரம் போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
17வது லோச்சபாவின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 16ந் தேதி நிறைவு பெறுகிறது. இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் லோச்சபா தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பதை கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி அறிவித்தது. இதன்படி ஏப்ரல் மாதம் 19ந் தேதி முதல் ஜூன் 1ந் தேதி முடிய 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ந் தேதி தமிழ்நாடு (ஒரே நாளில்), உத்தரகாண்ட், மத்தியபிரதேசத்தில் ஒருபகுதி, உத்தரபிரதேசத்தின் ஒருபகுதி, ராஜஸ்தானின் ஒரு பகுதி, சிக்கிம், மேகாலயா, திரிபுரா, அசாமின் ஒருபகுதி, மேற்கு வங்காளத்தின் ஒருபகுதி, மிசோரம், நாகாலாந்து, அருணாசலபிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் பீகாரில் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
நாடு முழுவதும் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமலில் இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் ரொக்கமாக 50000 பணத்திற்கு மேல் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுபாட்டிகளை பெட்டி பெட்டியாக எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தங்கத்தையும் மொத்தமாக எடுத்து செல்ல தடை உள்ளது. பரிசு பொருட்கள், பண விநியோகத்தை தடுக்கவும் போலீசார் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள்.
நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் ரொக்கம்,மது,தங்கம் மற்றும் பரிசு பொருட்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அந்த வகையில் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு மதுபானங்கள் கடத்தி வரப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்..
பொதுவாக புதுச்சேரியில் தமிழ்நாட்டைவிட மதுபானங்கள் விலை குறைவு என்பதால், புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு மதுபானங்கள் கடத்தி வருவது சர்வ சாதாரணமாக நடக்கும். அவற்றை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுப்பதை போலீசார் வழக்கமாக வைத்துள்ளனர். தற்போது மதுபானங்கள் கடத்தப்படுவதை தடுக்க விழுப்புரம் மாவட்ட போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்தை நோக்கி டிராக்டர் ஒன்று வைக்கோல் மூட்டைகளை ஏற்றியபடி வந்தது. வைக்கோல் முட்டைகளை போலீசார் சோதித்த போது, அதற்கு அடியில் பெட்டி பெட்டியாக மதுபானங்கள் இருந்தது.. இதையடுத்து மதுபாட்டில்களையும், அதை கடத்தி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications