சட்டையை கழட்டியதும் அதிர்ச்சி.. உடல் முழுதும் 150 மதுபாட்டில்கள்.. போலீசாருக்கே ஷாக் கொடுத்த நபர்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இருந்து உடல் முழுவதும் செலோ டேப் கொண்டு ஒட்டி மதுபாட்டில்களை விழுப்புரம் நபர் ஒருவர் கடத்தி வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை மடக்கிப் பிடித்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைவு என்பதால், அதனை ஒட்டியுள்ள பகுதிகள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் புதுச்சேரிக்குச் சென்று மது பாட்டில்களை வாங்குவது வழக்கம். தமிழகத்தை ஒப்பிடும்போது புதுச்சேரியில் மதுபானங்களின் விலை மிகவும் குறைவு. இதனால், விழுப்புரம், கடலூர், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகலைச் சேர்ந்தோர் அங்கு மதுபாட்டில்களை வாங்கி கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் மது பாட்டில்களை உடல் முழுவதும் செலோ டேப் கொண்டு ஒட்டி கடத்தி வந்த நரை போலீஸார் விழுப்புரத்தில் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் தனிப்படை உதவி ஆய்வாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் சென்று கொண்டிருந்துள்ளார். அவரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதையடுத்து, அந்த நபரை மதுவிலக்கு அமல் பிரிவுக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அந்த நபரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், ஜிஆர்பி தெருவைச் சேர்ந்த 40 வயதான நாகமணி என்பது தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் 90 மில்லி கொண்ட 100 மதுபாட்டில்கள் மற்றும் 150 மில்லி கொண்ட 25 மதுபாட்டில்களை அந்த நபர் வைத்திருப்பது தெரியவந்தது.
நாகமணி சட்டையை கழற்றியபோது, அவர் உடல் முழுவதும் கிட்டத்தட்ட 150 மது பாட்டில்கள் ஒட்டப்பட்டிருப்பதை கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை வாங்கி உடல் முழுவதும் ஒட்டிக் கொண்டு பேருந்து மூலமாக விழுப்புரத்துக்கு எடுத்து வந்துள்ளார். இதையடுத்து, அவரிடமிருந்து 150 பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக நாகமணியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications