கோவில் நில விற்பனை மோசடி.. பாஜக எம்எல்ஏவுக்கு சிக்கல்.. அதிரடி காட்டிய ஹைகோர்ட்
புதுச்சேரி: கோவில் நில விற்பனை மோசடி வழக்கில் புதுச்சேரி பாஜக எம்எல்ஏ ஜான் குமார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய புதுச்சேரி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் அரசில் எம்எல்ஏவாக இருந்தவர் ஜான்குமார். இவர் காங்கிரஸ் கட்சி கடந்த 2021ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இதன்பிறகே காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு நடந்தசட்டசபை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது. இதில் ஜான் குமார் பாஜக சார்பில் எம்எல்ஏவாக உள்ளார்.

இந்நிலையில் ஜான்குமாருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு தற்போது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில், பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து, தனியார் நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளதாக கூறி, இதுசம்பந்தமான விற்பனை பத்திரத்தை ரத்து செய்யக் கோரி, புதுச்சேரியைச் சேர்ந்த வி.வேல்முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவிசந்தர் இந்த நில அபகரிப்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் தற்போதைய சட்டன்ற உறுப்பினர் ஜான்குமார் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம் சுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்றால், வழக்கின் விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்படும் எனக்கூறி விசாரணையை அடுத்த வாரம் தள்ளி வைத்துள்ளார்.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!










Click it and Unblock the Notifications