ஒரே அறையில் காரைக்கால் விதவை பெண் காயத்ரி, வாலிபர் .. இருந்த கோலத்தை கண்டு ஆடிப்போன உறவுகள்
புதுச்சேரி: புதுச்சேரி: காரைக்கால் மஸ்தான் பள்ளி வீதியை சேர்ந் காயத்ரி என்பவர் விதவை ஆவார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். அந்த பகுதியில் ஒரு இட்லி கடை நடத்தி வருகிறார். காயத்ரிக்கும், அவரது உறவினர் காளிதாஸ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்தனர். இதற்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விதவை பெண் மற்றும் வாலிபர் ஒரே மின்விசிறியில் அடுத்தடுத்து வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் உறவினர்களை ஆடிப்போக வைத்தள்ளது.
விதவை பெண், கணவனால் கைவிடப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞர்களை பெற்றோர்கள் எதிர்ப்பது அதிகமாக இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பையன் விதவை பெண்ணை காதலிப்பதை வெறுக்கிறார்கள்.திருமணம் ஆகி கைவிடப்பட்ட பெண்ணை ஏற்றுக்கொண்டால் சமூகம் என்ன சொல்லும் என்று தயங்குகிறார்கள். இது இன்னமும் கிராமங்களிலும், சிறிய நகரங்களிலும் அதிகமாக இருக்கிறது.

காரைக்கால் மஸ்தான் பள்ளி வீதியை சேர்ந்த 38 வயதாகும் காயத்ரி அந்த பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவரது கணவர் மாணிக்கம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவர் மாணவிக்கம் உடல் நலக்குறைவால் காலமானார். அதன்பிறகு தனி ஆளாக காயத்ரி இட்லி கடை நடத்தி வந்தார்.
இந்தநிலையில் காயத்ரிக்கும், அவரது உறவினர் காளிதாஸ் அவ்வப்போது சிறிய உதவிகளை செய்து வந்ததில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்தனர்.
ஆனால் இதற்கு இரு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் காளிதாசின் பெற்றோர் அவருக்கு உடனே திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இதனால் காதலர்கள் இருவரும் வருத்தத்தில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காயத்ரி வீட்டுக்கு வந்த காளிதாஸ், சிறிது நேரம் பேசிவிட்டு இரவு 10.30 மணிக்கு தோசை ஊற்றி தரும்படி கேட்டாராம். அதன்படி தோசை ஊற்ற காயத்ரி சமையல் அறைக்கு சென்ற நிலையில், மற்றொரு அறையில் இருந்து திடீரென்று சத்தம் வந்தது. உடனே அங்கு சென்றுபார்த்தபோது காளிதாஸ் மின்விசிறியில் உயிரையே விட்டுவிட்டார்.
கன்னியாகுமரி கடல் அலையில் சிக்கி மீண்ட கல்லூரி மாணவர்.. இரண்டாவது முறையாக வந்த எமன்.. இப்படியுமா?
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், காளிதாசை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் காளிதாஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் காயத்ரி சோகத்துடன் காணப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து நள்ளிரவில் வீடு திரும்பிய அவர், காளிதாஸ் தூக்கில் தொங்கிய அதே மின் விசிறியில் தூக்குப்போட்டு உயிரை விட்டு விட்டார்-இது குறித்து காயத்ரியின் அண்ணன் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விதவை பெண், வாலிபர் அடுத்தடுத்து ஒரே மின்விசிறியில் உயிரை விட்ட சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications