Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருட்டென வந்த "எழிலரசி".. வழிமறித்த போலீஸ்.. திகுதிகு நாகூர்.. "அங்கே" சேர்ந்தும் புண்ணியில்லை

பெண் தாதா எழிலரசியை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

காரைக்கால்: சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனுவையும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பெண் வேட்பாளர் தாதா எழிலரசியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Recommended Video

    வேட்பு மனுதாக்கல் செய்ய வந்த புதுச்சேரி பெண் தாதா எழிலரசி கைது...சினிமாவை மிஞ்சிய பரபர காட்சிகள்!

    காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்... இவர் ஒரு பிசினஸ்மேன்.. இவரது 2வது மனைவிதான் எழிலரசி.. 45 வயதாகிறது.. இவர் ஒரு தாதா.. காரைக்கால் நேதாஜிநகரில் வசித்து வருகிறார்..

    முன்னாள் அமைச்சர் சிவக்குமார், ராதாகிருஷ்ணனின் முதல் மனைவி வினோதா, திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்த அய்யப்பன் ஆகியோரை கூலிப்படையை வைத்து கொலை செய்தல் உள்ளிட்ட பல கேஸ்கள் எழிலரசி மீது உள்ளது..இப்போதும் இவை எல்லாம் நிலுவையில்தான் உள்ளன.. அதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அசைக்க முடியாத தாதாவாகவே எழிலரசி வலம் வந்து கொண்டிருந்தார்..

    கைது

    கைது

    இதற்கிடையே கடந்த வருஷம், எழிலரசி, விக்ரமன் ஆகியோர் காரைக்கால் நகர் பகுதியில் உள்ள ஒரு தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டினர்.. இதுதவிர ராதாகிருஷ்ணனின் முதல் மனைவியின் மகன் அஜேஸ்ராமுவை மிரட்டி டாஸ்மாக் கடை ஒன்றை வாங்கிய வழக்கும் உள்ளது... இந்த வழக்குகளில் எழிலரசி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்... அப்போது முதல் எழிலரசியை காணோம்.. அதனால், அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    பாஜக

    பாஜக

    இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் எழிலரசி திடீரென பாஜகவில் இணைந்துவிட்டதாக தகவல்கள் வந்தன.. தேர்தல் நெருங்கி வருவதால், எழிலரசியின் அரசியல் மிக முக்கியமானதாகவும், பரபரப்பாகவும் பார்க்கப்பட்டது.. பிறகு, திருமலைராயன்பட்டினத்தில் எழிலரசி போட்டியிட போவதாக மற்றொரு செய்தி சோஷியல் மீடியாவில் பரபரத்தது.

    போட்டி

    போட்டி

    இதையடுத்து, எழிலரசி சுயேச்சையாகவே போட்டியிட போவதாகவும், இதற்காக மனு தாக்கல் செய்ய ரெடியாகி விட்டதாகவும் அடுத்த செய்தி வந்தது.. இறுதியில், திருமலைராயப்பட்டியில் வேட்பு மனுவையும் தாக்கல் செய்துவிட்டார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், திருமலைராயன்பட்டினத்துக்கு எழிலரசி காரில் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது..

    கைது

    கைது

    அந்த தகவலின் அடிப்படையில், எஸ்பி வீரவல்லபன் உத்தரவின் பேரில், போலீசார் விரைந்து சென்று நாகூர் அருகே வாஞ்சூர் என்ற இடத்தில் வழிமறித்து, எழிலரசியை கைது செய்தனர்.. சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துவிட்டநிலையில், தொகுதியில் அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில், தாதா எழிலரசி கைதானது பெரும் பரபரப்பை தந்து வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+