அன்பளிப்பாக வந்த ஆட்டுக்குட்டி.. அப்படி ஒரு பார்வை பார்த்த அண்ணாமலை.. அந்த நொடி செய்த சம்பவம்
புதுக்கோட்டை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனக்கு அன்பளிப்பாக வந்த ஆட்டுக்குட்டியை, ஒரு பெண்ணுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற யாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த யாத்திரை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்துள்ளது. அண்ணாமலை நிர்வாகிகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று மாலை அண்ணாமலை புதுக்கோட்டை மாவட்டத்தில் யாத்திரை மேற்கொண்டார். அப்போது பாஜக தொண்டர்கள் உள்பட பலரும் உற்சாகமாக வரவேற்றார்கள். புதுக்கோட்டை மச்சவாடியில் இருந்து அண்ணா சிலை வரை கட்சி நிர்வாகிகளுடன் அண்ணாமலை யாத்திரையில் ஈடுபட்டார். அத்துடன் அப்பகுதியில் பாஜகவின் சாதனைகளை கூறி பிரச்சாரமும் மேற்கொண்டார்.
அப்போது மாவட்ட பாஜக பொருளாளர் முருகானந்தம், அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்க, அதனை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்ட அவர், அந்த ஆட்டுக்குட்டிக்கு சிவகாமி என்று பெயர் சூட்டியதுடன், அதனை பெண் நிர்வாகி ஒருவருக்கு வழங்கி நன்றாக வளர்க்கும்படி கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, ஆட்டுக்குட்டி அன்பளிப்பாக வழங்கப்பட்ட உடன், அதை வாங்கி அண்ணாமலை அப்போது கூட்டத்தினரை பார்த்து, ஆட்டுக்குட்டி வைத்துள்ள பெண் மட்டும் கை தூக்குங்கள் என்று கூறினார். சிலர் கை தூக்கினார்கள். அப்போது அண்ணாமலை ஒவ்வொருவராக உங்கள் தோட்டத்தில் ஆட்டுக்குட்டி உள்ளதா என்று கேட்டபடி இருந்தார்.

பின்னர் அவர்கள் அனைவரிடமும் நீங்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள், நீங்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள் என்றுகூறினார். தொடர்ந்து தனக்கு அன்பளிப்பாக வந்த ஆட்டுக்குட்டியை, இந்த அம்மா அவர்களுக்கு நான் பரிசாக கொடுக்கிறேன் என்றார். ஒரு பெண்ணை மேலே அழைத்து ஆட்டுக்குட்டியை பரிசளித்த அண்ணாமலை, அம்மா இந்த ஆட்டுக்குட்டியை நீங்க பத்திரமாக வளர்க்க வேண்டும் என்றார்.
அப்போது ஆட்டு குட்டியை ஒரு பார்வை பார்த்தவர், ஆட்டுக்குட்டி நனைத்து பயந்தில் இருக்கிறது.. அண்ணே நீங்களே (மாவட்ட பாஜக பொருளாளர்) உங்கள் கையில் பத்திரமாக அந்த அம்மா கையில் கொடுத்துவிடுங்கள். நிறைய ஆடுகள் அவருக்கு கிடைக்க வேண்டும். நன்றாக வளர்க்க வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications