600 நாட்கள் கடந்தும் கண்டறியப்படாத வேங்கைவயல் குற்றவாளிகள்.. 1 மாத காலம் அவகாசம் கேட்ட சிபிசிஐடி!
புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசார் ஒரு மாத காலம் அவகாசம் கோரியுள்ளனர். வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடந்து 600 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2022 டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.

முதலில் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. அப்போதும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து 3 பேருக்குக் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்படி, குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. எனினும், வழக்கில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இதையடுத்து விசாரணை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். புதிய விசாரணை அதிகாரியாக தஞ்சாவூரைச் சேர்ந்த சிபிசிஐடி கல்பனா தத் என்பவர் நியமனம் செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடந்து வருகிறது. வேங்கை வயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என சிபிசிஐடியினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சம்பவம் நடந்து சுமார் 600 நாட்களுக்கு மேலாகியும் தற்போது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. குடிநீர் நீர்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவரை கூட கைது செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது சிபிசிஐடி மீண்டும் அவகாசம் கோரி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications