பொறுமையா இருக்கோம்.. ஆளுநர் விவகாரத்தில் முதல்வர் தெளிவான முடிவு எடுப்பார்.. அமைச்சர் ரகுபதி உறுதி!
புதுக்கோட்டை : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதியைப் போன்று செயல்படுகிறார் என்றும், ஆளுநர் விவகாரத்தைப் பொறுத்தவரை முதலமைச்சர் தெளிவான முடிவை எடுப்பார் என்றும் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குடிமைப் பணிகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் நேற்று கலந்துரையாடல் நிகழ்த்தினார். அப்போது பேசிய ஆளுநர் ரவி, சட்டசபையில் எந்த தீர்மானம் வேண்டுமென்றாலும் நிறைவேற்றலாம். ஆனால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அது சட்டமாகாது. தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் இருப்பதற்கு நாகரிகமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்று பொருள். சட்ட மசோதா நிலுவையில் உள்ளது என்றால் அது நிராகரிக்கப்படுகிறது என்று அர்த்தம் எனப் பேசியது சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில், இன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற 3 புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, "தமிழ்நாடு அரசின் மசோதாவை நிலுவையில் வைத்தால் நிராகரிப்பதாகத்தான் அர்த்தம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இவ்வாறு ஆளுநர் பேசுவது அரசியல் சட்ட வரையறையை மீறிய செயல் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக விளக்கியுள்ளார்.
ஆளுநர் அரசியல்வாதியைப் போன்று செயல்பட்டு வருகிறார். இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது குறித்து மக்கள்தான் தீர்ப்பு அளிப்பார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த நிதி பெற்றதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருப்பது குறித்து தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். அவர்களின் கருத்துதான் எனது கருத்தும்" எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, "தமிழ்நாடு எப்போதும் பொறுமையைக் கடைபிடிக்கக்கூடிய மாநிலம். கருத்து மோதல்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் அனுசரித்து போகக்கூடிய மாநிலம். எனவே, ஆளுநர் விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதல்வர் தெளிவான முடிவை எடுப்பார்" எனத் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications