அறந்தாங்கியில் தெறிக்க விட்ட தேமுதிகவினர்.. கூட்டணி உடைந்ததற்காக பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
புதுக்கோட்டை: அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதால் தேமுதிகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டியுள்ளனர்.
Recommended Video
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே அறந்தாங்கி நகர தேமுதிகவினர் சார்பில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதால் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடியுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சி, தொகுதி பங்கீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கூட்டணியில் இருந்து விலகியுள்ளது.
இதையடுத்து, தேமுதிகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி நகர தேதிமுக நகரசெயலாளர் மணிகாந்த் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நகரச் செயலாளர், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவினர் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக சார்பில் போட்டியிட்டு அவர்களை டெபாசிட் இழக்கச் செய்வோம். அதோடு மட்டுமல்லாமல் எங்களது தலைவர் அவர்கள் கரத்தை வலுப்படுத்தி தமிழக முதல்வரக்குவோம் இந்த தேர்தலில் தான் எங்களது பலம் தெரியும் என கூறினார்.

நிகழ்வில் தேமுதிக நிர்வாகிகள் நைனாமுகமது,காந்தி, ஆனந்த்,பிரபு உட்பட நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
-
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications