"டச் பண்ணாதீங்க".. அடங்காத ஆசை.. நடுரோட்டிலேயே திமிறிய வசந்தி.. "அசிங்கப்பட்டு" கைதாகி.. இப்ப பாருங்க
மதுரை: சாட்சிகளை மிரட்டிய புகாரில் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் வசந்திக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.. யார் இந்த நாகமலை வசந்தி?
புதுக்கோட்டை நாமகலை ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் வசந்தி.. நாகமலை வசந்தி என்பார்கள்.. பணியில் சேர்ந்தது முதலே சின்ன சின்ன குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்..
அதாவது, அப்பாவிகளிடம் பணம் பறிப்பது, விசாரணை என்ற பெயரில் அவர்களை மடக்கி பணத்தை கறப்பது.. இப்படி வசூல்ராணியாக வலம் வந்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் யாரும் துணிந்து ஸ்டேஷன் வரை வந்து, புகார் சொல்லாததால், அகப்படாமல் தப்பி வந்தார் வசந்தி.. ஆனால் 2 வருடங்களுக்கு, அதாவது 2021-ல் அர்ஷத் என்பவர் மூலம் வசந்திக்கு சிக்கல் வந்தது.
நாகமலை வசந்தி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் இந்த அர்ஷத்.. இவர் புதிதாக தொழில் தொடங்க பத்து லட்சம் ரூபாய் வைத்திருந்தார்.. நாகமலையில் வசிக்கும் தன் நண்பர் பாண்டி என்பவரிடம் கடன் கேட்டிருக்கிறார்.. அந்த நண்பரோ, 10 லட்சம் ரூபாய் எடுத்து வா, அதை, இரட்டிப்பு செய்து தருகிறேன் என்று ஆசைக்காட்டி வரவழைத்துள்ளார்.. இது தெரியாமல் அர்ஷத், ஒரு பையில் 10 லட்சம் வைத்துக்கொண்டு, நாகமலை புதுக்கோட்டைக்கு சென்றார்..
10 லட்சத்துடன் அர்ஷத் என்பவர் வந்திருக்கும் விஷயத்தை பாண்டி, இன்ஸ்பெக்டர் வசந்திக்கு போனை போட்டு சொல்லிவிட்டார்.. இன்ஸ்பெக்டர் வசந்தியும், ஸ்பாட்டுக்கு வந்து, விசாரிக்க வேண்டும் என்று சொல்லி அர்ஷத்தை ஜீப்பில் அழைத்துச் சென்றிருக்கிறார்.. கொஞ்ச தூரம் சென்றதும் ரூ.10 லட்சத்தை வசந்தி பறித்துக்கொண்டு, அர்ஷத்தை இறக்கிவிட்டுள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ஷத், தன்னுடைய பணத்தை திரும்பி தருமாறு கேட்டிருக்கிறார்.
ஸ்கூல் நோட்டு புத்தகம்: அதற்கு வசந்தி "பணமா? எங்கே இருந்தது? என் பிள்ளை சத்தியமா உன்கிட்ட இருந்த பையில் ஸ்கூல் நோட்டு புக்தான் இருந்தது... பணமே இல்லையே.. இப்படியே நச்சரித்தால் கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிருவேன்" என்று மிரட்டவும்தான், மாவட்ட எஸ்பி வரை சென்றுள்ளார் அர்ஷத். மாவட்ட எஸ்பி பாஸ்கரனிடம் அர்ஷத் புகார் செய்திருக்கிறார்... இதையடுத்து எஸ்பியே இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டார்.. தனி டீம் இறக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த வசந்தியை அவர்கள் கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று வழக்கை எதிர்கொண்டார் வசந்தி.. இந்நிலையில், வசந்தி தன்னுடைய வழக்கு தொடர்பான சாட்சிகளை மிரட்டியதாக அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் கிளம்பின. இது தொடர்பாக மிரட்டுக்குள்ளான நபர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்கவும், அதன்பேரில் அவர் மீது வழக்கும் பதிவானது..
தென் மண்டல ஐஜி அஸ்ராக கார்க் ஆலோசனையின் பேரில், இந்த வழக்கை அவரை கைது செய்ய திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த மாதம், மதுரை புறவெளிப் பகுதியில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகம் அருகே காரில் வந்து கொண்டிருந்த வசந்தியை போலீசார் விரட்டி சென்றனர். ஆனால், போலீசாரை பார்த்ததுமே, காரை வேகமாக ஓட்டியுள்ளார் வசந்தி.. பின்னாடியே சேசிங் செய்து, வசந்தியை போலீசார் மடக்கிப்பிடித்தனர்..
பிடிவாதம் பிடித்த வசந்தி: காரை வழிமறித்து அவரை கீழே இறங்குமாறு சொன்னதற்கு, "இறங்க மாட்டேன்" என்று சொல்லி காரிலேயே காருக்குள்ளேயே பிடிவாதமாக உட்கார்ந்திருந்தார்.. பிறகு, அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது, பெண் போலீஸ் அதிகாரிகள், குண்டுகட்டாக ஓடிவந்து வசந்தியை தூக்கியும், தரதரவென இழுத்துச்சென்றும் கைது செய்து, வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். வசந்தி செய்த அட்டகாசத்தினால், அந்த பகுதியே அன்று பரபரப்பாகிவிட்டது..
இந்நிலையில்தான், மீண்டும் கைது செய்யப்பட்ட வசந்தி பணியில் இருந்தும் ஒரேடியாக நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரி மதுரை ஹைகோர்ட்டில் வசந்தி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி தாரணி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வசந்திக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
நிபந்தனை ஜாமீன்: இதையடுத்து நீதிபதி, நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் மனுதாரர் கைது செய்யப்பட்டார். 36 நாட்கள் ஜெயிலில் இருந்துள்ளார். கீழமை நீதிமன்றத்தில் சாட்சியங்கள் மீதான விசாரணை மே 11-ல் நடக்கிறது. இது முடிந்ததும் மே 11க்கு பிறகு மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.,,அதன் பிறகு மனுதாரர் 30 நாட்களுக்கு மதுரை ஜே.எம் 1 நீதிமன்றத்தில் தினமும் காலை மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்..!!
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications