கொரோனா உயிரிழப்புகளை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை: கொரோனா உயிரிழப்புகளை மறைக்கும் அவசியம் அரசுக்கு எதுவும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Recommended Video
புதுக்கோட்டை நகர பகுதிகளில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு ,எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வழங்கினார். அப்போது பொதுமக்களிடம் விஜயபாஸ்கர் பேசியதாவது:

மக்களும் அதிமுக அரசும்
அதிமுக அரசு மக்கள் மீது எப்போதுமே பாசமாக இருக்கும். அதே போன்று மக்களும் அதிமுக மீது எப்போது பாசமாக இருப்பார்கள். பொதுமக்கள் ஒரு துயரத்தில் இருக்கும்போது அவர்களோடு எப்போதும் துணை நிற்பது அதிமுக தான், அதிமுக அரசுதான் எப்போதும் மக்களுக்கு துணையாக இருக்கும்.

முக கவசம் முக்கியம்
மற்றவர்கள் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துவிட்டு மக்களை மறந்துவிடுவார்கள். பொதுமக்கள் வெளியே வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பம். இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

உயிரிழப்பு மறைப்பா?
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை தமிழக அரசு மறைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது. தமிழக அரசு மீது தவறான குற்றச்சாட்டுகளை யாரும் கூற வேண்டாம்.

களத்தில் இருக்கிறோம்
ஏனெனில் கேள்வி கேட்பது அனைவருக்குமே சுபலமானது. ஆனால் களத்தில் இருந்து போராடுகிறபோதுதான் அதனுடைய வலியை தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications