புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பரோட்டா சுட்டு ஓட்டு கேட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்.. புதுக்கோட்டையில் களேபரம்!

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக, உணவகத்தில் பரோட்டா சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 9 ம் தேதி முதல் 17 ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்று, வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

Health Minister Vijayabaskar was actively collecting votes for the AIADMK candidate

நேற்று ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு பணி நடைபெற்றது. இந்நிலையில் சின்னத்தை பெற்ற வேட்பாளர்கள் இன்று காலை முதல் தங்கள் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

'செல்லாத காசை' வைத்து பல கோடி சொத்து வாங்கிய சசிகலா.. செம திட்டம்.. வருமான வரித்துறை பரபரப்பு தகவல்'செல்லாத காசை' வைத்து பல கோடி சொத்து வாங்கிய சசிகலா.. செம திட்டம்.. வருமான வரித்துறை பரபரப்பு தகவல்

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மேற்கு பகுதி மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு, அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமிக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Health Minister Vijayabaskar was actively collecting votes for the AIADMK candidate

அப்போது அங்குள்ள உணவகத்திற்கு சென்ற விஜயபாஸ்கர், பரோட்டா சுட்டு காண்பித்து (பரவாயில்லை நல்லாவே பரோட்டா சுட்டார் விஜய பாஸ்கர்) அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அமைச்சர் பரோட்டா சுட்டதை உடனிருந்த அதிமுகவினர் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

Health Minister Vijayabaskar was actively collecting votes for the AIADMK candidate

அதிமுகவும், திமுகவும் நூதன முறையில்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற வேண்டுமென முனைப்பு காட்டி வருகின்றன.

Health Minister Vijayabaskar was actively collecting votes for the AIADMK candidate

இப்படித்தான் லோக்சபா தேர்தலின்போது நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கலில் போட்டியிட்டபோது விதம் விதமாக பிரச்சாரம் செய்து மக்களைக் கவர்ந்தார். அந்தப் பாணியை தற்போது மற்ற கட்சிகள் கையில் எடுத்துள்ளன போலும்.

English summary
Health Minister Vijayabaskar was actively collecting votes for the AIADMK candidate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X