39 இடத்திலும் வெற்றி.. திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு எப்படி இருக்கும்? கார்த்தி சிதம்பரம் பதில்
புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீடு எப்படி முடிவுக்கு வரும் என்பது பற்றி கார்த்தி சிதம்பரம் எம்பி விளக்கி உள்ளார். மேலும் தமிழ்நாட்டில் இந்தி, இந்துத்துவா அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மோடி எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழகத்துக்கு வந்து செல்லலாம் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவிடம் காங்கிரஸ் தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து பேசியுள்ளனர். கடந்த முறை தமிழகத்தில் 9 தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் 8 இடங்களில் வென்றது.

அந்த வகையில் வரும் தேர்தலில் தமிழகத்தில் 10 மற்றும் புதுச்சேரி என 11 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக 8 தொகுதிகளை மட்டுமே வழங்க முன்வருவதாக கூறப்படுகிறது. இதனால் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் தான் புதுக்கோட்டையில் இன்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காங்கிரஸ் கட்சியை முந்தி பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பற்றியும், காங்கிரஸில் தொகுதி பங்கீட்டில் நிலவும் இழுபறி பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே வேட்பாளர் அறிவிப்பதன் மூலம் முந்தி போகிறார்கள் என்ற அர்த்தம் இல்லை. அனைவருக்கும் ஒன்றாக தான் தேர்தல் நடக்கும். தமிழகத்தை பொறுத்தவரை திமுக, காங்கிரஸ் உறவ நீண்ட நாள் உறவாகும். நிலைத்து இருக்கும் உறவாகும். இது திருப்திகரமானதாக இருக்கும். தொகுதி பங்கீடு என்பது சுமூகமாக முடிக்கப்படும். பேச்சுவார்த்தையின் மூலம் தொகுதி பங்கீட்டில் முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் தான் உள்ளது. இந்த தொகுதியை தான் அனைத்து கட்சிகளுக்கும் பிரித்து வழங்க வேண்டும். அதனை திமுக சிறப்பாக செய்யும். மாநிலத்தில் திமுக-காங்கிரஸ் என்பது வெற்றி கூட்டணி. இந்த கூட்டணி 39 தொகுதிகளிலும் வெல்லும். அதிமுக அந்த கட்சியை காப்பாற்றி கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு மக்கள் இந்தி, இந்துத்துவா அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லை. பிரதமர் தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம். அவர் இந்திய பிரதமர். எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் அவர் எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம்'' எனக்கூறினார். கார்த்தி சிதம்பரம் தற்போது சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பியாக உள்ளார். கடந்த முறை திமுக கூட்டணியில் சிவகங்கையில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை மீண்டும் அதே தொகுதியில் களமிறங்க நினைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியும் சிவகங்கையை திமுக கூட்டணியிடம் கேட்டுள்ளது.
இதற்கிடையே தான் சிவகங்கையில் திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அம்மாவட்ட திமுகவினரும், காங்கிரஸில் ஒரு பிரிவினர் சிவகங்கையில் கட்சி சார்பில் கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க கூடாது எனக்கூறி தீர்மானம் நிறைவேற்றி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications