சுத்தமாக எதுவுமே இல்லை.. என்ன செய்வது என்றே தெரியலை.. டெல்டா மக்களின் வேதனை!
Recommended Video

புதுக்கோட்டை: காவிரி டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பை வரலாறு காணாத பாதிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஒட்டுமொத்தமாக வாழ்வாதாரத்தை துடைத்துப் போட்டு விட்டது இந்தப் புயல்.
ஒவ்வொரு மாவட்டமும் நிர்க்கதியாக நிற்கிறது. லட்சக்கணக்கில் மரங்கள் அடியோடு வீழ்ந்ததுதான் மிகப் பெரிய பாதிப்புக்கு காரணம் என்று சொல்கிறார்கள். காரணம், மரங்கள் அடியோடு விழுந்ததால் மின்சார வயர்களும் சேர்ந்து காலியாகியுள்ளன. மின் கம்பங்களும் விழுந்து விட்டன. இதனால் மின் இணைப்பு கொடுக்க பல நாட்கள் ஆகும் நிலை காணப்படுகிறது.
மின்சாரம் இல்லாததால் அதை நம்பியுள்ள பல வேலைகளும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் குடிநீர், பால் விநியோகம், போக்குவரத்து என அடுத்தடுத்து தொடர் சங்கிலி போல பாதிப்பு பல மடங்கு அதிகமாகி விட்டது.

சூறையாடப்பட்ட புதுக்கோட்டை
புதுக்கோட்டை வரலாறு காணாத சேதத்தை சந்தித்துள்ளது. புதுக்கோட்டை நகரில் மரங்கள்தான் அழகு. பெரிய பெரிய மரங்கள் பார்க்கவே கண் கொள்ளாத காட்சியாக இருக்கும். அத்தனை மரங்களும் அடியோடு வீழ்ந்துள்ளன. புதுக்கோட்டை நகர் முழுவதும் போர்க்களம் போல காணப்படுகிறது. மின்சாரம் இல்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே மின்சாரம் உள்ளது.

பொருட்கள் விலை உயர்வு
கடைகள் சரிவர இன்னும் திறக்கப்படவில்லை. பொருட்களின் விலையும் விண்ணைத் தொடுகிறது. பால், குடிநீர் விலைதான் அநியாயத்திற்கு உள்ளது. அரை லிட்டர் பால் விலை 100 என்றால் மக்கள் என்ன செய்ய முடியும். கைக்குழந்தைகளை வைத்துள்ளோர் நிலைமை மிக மோசமாக உள்ளது.

முழுமையாக சரியாக நாட்களாகும்
தற்போது உள்ள நிலவரத்தைப் பார்த்தால் புதுக்கோட்டை சரியாக பல நாட்களாகும் என்று தெரிகிறது. நகருக்கே இந்த நிலை என்றால் புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. விழுந்த மரங்களை இன்னும் எடுக்கவே முடியவில்லை. எடுத்த மரத்தை எங்கு போய் போடுவது என்று தெரியவில்லை. மின்சாரம் சுத்தமாக இல்லை. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. மக்கள் நிர்க்கதியாக நிற்கின்றனர்.

ஒட்டுமொத்த மாவட்டங்களும்
ஒட்டுமொத்த காவிரி டெல்டா மாவட்டங்களும் மிக பலத்த சேதத்தை சந்தித்துள்ளன. தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை என அத்தனை மாவட்டங்களும் அத்தனை சீக்கிரம் மீள முடியாத அளவுக்கு சேதத்தை சந்தித்து பரிதவிப்பில் உள்ளன. மீட்புப் பணிகள் மிகப் பெரிய அளவில் நடந்தால் மட்டுமே சேதத்திலிருந்து விரைவில் மீள முடியும் என்ற நிலை காணப்படுகிறது.

பிற மாவட்ட மக்கள் இறங்க வேண்டும்
அரசு முழு வீச்சில் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தற்போது நடந்து வரும் பணிகள் போதுமானதாக இல்லை என்பதே உண்மை. கூடுதலாக களப் பணியாளர்கள் தேவை. இதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். அதே போல பால் குடிநீரை அதிக விலைக்கு விற்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்து உள்ளே தூக்கிப் போட வேண்டும். இவை அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கிடைக்க அரசு வழி செய்ய வேண்டும் என்பதே மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
காவிரித் தாயின் பிள்ளைகள் இன்று கண்ணீரில் மூழ்கியுள்ளபோது நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது முறையற்றது. முடிந்த வரை அனைவரும் கை கொடுப்போம்.. ஏதாவது ஒரு வகையில் உதவுவோம்.. உதவ வேண்டும் என்பதே நமது கோரிக்கையாகும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications